தோனி கூறிய இந்த வார்த்தைகளே எனது ஆட்டத்தை மாற்றியது – ருதுராஜ் கெய்க்வாட் பேட்டி

Ruturaj

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13வது ஐபிஎல் தொடரில் பெரிதாக எந்த ஒரு செயல்பாட்டையும் காட்டவில்லை. மூன்று கோப்பைகளை வென்ற அணி போல் விளையாடவில்லை. வயதான அணியை வைத்துக்கொண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல் பல போட்டிகளில் ஆடியதால் தோற்றுவிட்டு பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்லாமல் வெளியேறிவிட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோனியும் இந்த வருட ஐபிஎல் தொடரில் பெரிதாக ஆடவில்லை.

ஒரு சில வீரர்கள் மட்டுமே தங்களது பணியை தொடர்ந்து சரியாக செய்து கொண்டிருந்தார்கள். பேட்டிங், பந்துவீச்சு என எதுவுமே சிறப்பாக இல்லை. இந்த வருட ஐபிஎல் தொடரில் ருதுராஜ் எனும் இளம் வீரர் களமிறக்கப்பட்டார். இவர் கடைசி மூன்று போட்டிகளில் 65, 72, 62 என மூன்று அரை சதங்கள் அடித்து அசத்தினார். சீசன் துவக்கத்தில் களமிறக்கி விடப்பட்டார். அந்த போட்டிகளில் பெரிதாக ஆடவில்லை.

அதனைத் தொடர்ந்துதான் தொடக்க வீரராக களம் இறங்கிய பின்னர் தொடர்ந்து மூன்று அரைசதங்கள் அடித்தார். இந்நிலையில் இது குறித்து பேசியுள்ளார் ருதுராஜ் கூறுகையில்…
நான் முதல் சில போட்டிகளில் நன்றாக ஆடவில்லை. மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா போன்ற பந்துவீச்சாளர்களை நன்றாக ஆடவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறிவிட்டேன். இதன் காரணமாக எங்களது அணி தோற்று விட்டது. நாங்கள் வெறும் 114 ரன்கள் மட்டுமே எடுத்தோம்

இதற்கு காரணம் நான் தான் என்று எனது நம்பிக்கை இழந்து சோர்ந்து உட்கார்ந்து இருந்தேன். அப்போது தான் தோனி என்னிடம் வந்து எனக்கு ஆறுதலான வார்த்தைகளை கூறினார். நடந்தது நடந்துவிட்டது, அதைப் பற்றி கவலைப்படாதே. இனி என்ன நடந்தாலும் அடுத்த மூன்று போட்டிகளில் நீ கண்டிப்பாக ஆடுவாய்.உன் திறமையை நிரூபிக்க அந்த 3 போட்டி தான் இருக்கிறது என்று கூறினார்.

- Advertisement -

Ruturaj-3

அடுத்த மூன்று போட்டிகளில் களமிறங்குவது உறுதி என்ற நம்பிக்கை வந்தவுடன் நான் தொடர்ந்து மூன்று அரை சதங்கள் அடித்தேன். தோனி மட்டும் என்னிடம் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பேசாமல் இருந்தால் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் என்று கூறியுள்ளார் ருதுராஜ்.