போன வருஷம் தோனி கொடுத்த அட்வைஸ் தான் என்னோட சிறப்பான ஆட்டத்திற்கு காரணம் – சி.எஸ்.கே வீரர்

Ruturaj-3
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டு பிளேஆப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் லீக் சுற்றோடு வெளியேறியது. இத்தனை வருட ஐ.பி.எல் வரலாற்றில் முதன்முறையாக லீக் சுற்றோடு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரில் இருந்து வெளியேறியது. கடந்த ஆண்டு முதல் மூன்று போட்டிகளில் சொதப்பிய ருத்ராஜ் பின்னர் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டார். அதன்பின்னர் கடைசி சில போட்டிகளில் களமிறக்கப்பட்ட ருத்ராஜ் மிக அதிரடியாக ஆடி அனைத்து ரசிகர்களின் பாராட்டையும் பெற்றார்.

Ruturaj

- Advertisement -

இந்நிலையில் கடைசி சில போட்டிகளில் எப்படி நன்றாக விளையாடினார் என்பது குறித்து ருதுராஜ் தற்பொழுது கூறியுள்ளார். முதல் மூன்று போட்டிகளில் என்னால் சரியாக விளையாட முடியவில்லை. மிகப்பெரிய அளவில் சொதப்பி பின்னர் சில போட்டிகள் நான் விளையாடவில்லை. அப்போது மகேந்திர சிங் தோனி என்னிடத்தில் வந்து எப்பொழுதும் முடிவைப் பற்றி நினைத்துப் பார்க்கக் கூடாது என்று கூறினார்.

மேலும் வெற்றி பெறும் நேரத்திலும் சரி, தோல்வி வரும் நேரத்திலும் சரி எப்பொழுதும் நாம் தன்னம்பிக்கையை இழந்து விடக்கூடாது என்று என்னிடம் அறிவுறுத்தினார். மைதானத்தில் ஆடிக் கொண்டிருக்கும் பொழுது மனதில் எந்தவிதமான சிந்தனையையும் வைக்கக்கூடாது என்று கூறினார். சில போட்டிகளில் நாம் விளையாடாமல் போனால் அவ்வளவுதான் என்று நாம் நம்மை தரம் தாழ்த்திக் கொள்ளக் கூடாது , அதிலிருந்து மீண்டு வந்து அடுத்தடுத்த போட்டிகளில் நமது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று நம்பிக்கையை என் மனதில் மகேந்திர சிங் தோனி விதைத்தார்.

ruturaj 1

கடந்த ஆண்டு இறுதியில் எப்படி சிறப்பாக விளையாடினேனோ அதேபோல் இந்த ஆண்டு நடக்க இருக்கும் தொடரிலும் நான் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடுவேன் என்று ருதுராஜ் நம்பிக்கை தெரிவித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் தற்போது மும்பையில் தங்கி வலை பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

ruturaj

சென்னை அணி வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோத இருக்கின்றனர்.இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் யார் என்ற கேள்வி இன்றும் இருந்து கொண்டே இருக்கிறது. இது குறித்து பேசிய சிஇஓ காசிவிஸ்வநாதன் இன்னும் சில நாட்களில் அது குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று கூறியுள்ளார்.

Advertisement