ஐ.பி.எல் போட்டிகளில் தோனியின் ஓய்வு எப்போது ? – ருதுராஜ் கெய்க்வாட் அளித்த பதில் என்ன தெரியுமா ?

ruturaj
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரராக இருக்கும் ருத்துராஜ் கெய்க்வாட், அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக மகேந்திர சிங் தோணி தனது ஓய்வு முடிவை அறிவிப்பாரா என்ற கேள்விக்கு பதிலளித்திருப்பதோடு மட்டுமல்லாமல், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தனது ஓய்வு முடிவை தோனி அறிவித்தபோது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எந்த மாதிரியான சூழ்நிலை நிலவியது என்றும் தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடருக்கு முன்பாக மகேந்திரசிங் தோனி தனது ஓய்வு முடிவை அறிவிப்பாரா என்று எனக்கு தெரியாது. ஏனெனில் யாரும் எதிர்பார்த்திராத வகையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தார்.

Dhoni

- Advertisement -

அந்த நாளில், 10-12 வீரர்கள் சென்னையில் பயிற்சியில் இருந்தோம். அதை முடித்துவிட்டு சுமார் 7 மணி அளவில் மகேந்திர சிங் தோணியுடன் இரவு நேர உணவில் கலந்து கொண்டோம். அப்போது யாரோ ஒருவர் என்னிடம் மகேந்திர சிங் தோனி இன்ஸ்டாகிராமில் தனது ஓய்வு முடிவை அறிவித்து இருக்கிறார் என்று கூறினார். ஆனால் அதற்கு முன்பு வரை அவர் ஓய்வு பெறப் போகிறார் என்பது அங்கு இருக்கும் யாருக்கும் தெரியாது.

மேலும் இந்த முடிவைப் பற்றி அவர் எப்போதுமே எங்களிடம் எதுவும் பேசவில்லை. எனவே அவர் என்ன முடிவை எடுக்கப் போகிறார் என்பதை யாராலும் முன்கூட்டியே கூறிவிட முடியாது என்று அவர் கூறினார். அந்த பேட்டியில் மேலும் பேசிய அவர், அவருடைய ஓய்வு முடிவை நாங்கள் தெரிந்து கொண்டபின் வருத்தத்தில் ஆழ்ந்து விட்டோம் எனவே இதைப்பற்றி அவரிடம் கேட்பதற்கு போதிய தைரியம் அப்போது என்னிடம் இல்லை

சர்வதேச கிரிக்கெட்டில் அவரை மீண்டும் பார்க்க இயலாது மற்றும் ஒரு மிகப்பெரிய வீரர் இப்படி தன் ஓய்வு முடிவை அறிவித்துவிட்டார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அந்த முடிவை ஏற்றுக்கொள்ளவே எனக்கு 2-3 நாட்கள் ஆனது என்றும் அவர் அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார். ஐசிசி நடத்திய தொடர்கள் அனைத்திலும் கோப்பையை வென்ற ஒரே கேப்டன் என்ற மகத்தான சாதனையைப் படைத்த தோணி, கடைசியாக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடினார்.

Dhoni-1

அதற்குப் பிறகு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத அவர், 2020ஆம் ஆண்டு நடைபெற இருந்த டி20 உலக கோப்பை தொடருடன் தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது. கொரானா காரணமாக அத்த தொடர் தள்ளிப்போகவே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது ஓய்வு முடிவை அறிவித்த அவர், தற்போதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

Advertisement