- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இதை மட்டும் பண்ணா போதும்.. விராட் கோலியின் இடத்தை ருதுராஜ் கெய்க்வாட் பிடிச்சிடுவார் – விவரம் இதோ

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து அனுபவ வீரரான விராட் கோலி ஓய்வை அறிவித்து விட்டதால் இனி ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது. இவ்வேளையில் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் அவரது மூன்றாவது இடத்தில் விளையாடப்போகும் வீரர் யார்? என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான டி20 தொடருக்காக அறிவிக்கப்பட்ட அணியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தான் மூன்றாவது இடத்தில் களமிறங்கி பேட்டிங் செய்வார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதன் காரணமாக எதிர்காலத்தில் விராட் கோலியின் மூன்றாவது இடத்தை ருதுராஜ் கெய்க்வாட் நிரப்ப அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. டி20 கிரிக்கெட்டில் கடந்த பல ஆண்டுகளாக நிலையான வீரராக இருந்து வந்த விராட் கோலியின் இடம் தற்போது ருதுராஜுக்கு வந்துள்ள வேளையில் அவர் அந்த இடத்தை தக்கவைக்க அதிக வாய்ப்புள்ளது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் நாயகன் விருது வென்று விட்டால் நிச்சயம் அவரை அணியிலிருந்து நீக்க முடியாது என்பதனால் இந்த ஒரு தொடரில் மட்டும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் மூன்றாவது இடத்தில் விளையாடும் நிரந்தர வீரராக மாற அற்புதமான வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது.

- Advertisement -

மேலும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட் நிச்சயம் இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : முதல் ஜிம்பாப்வே டி20யில் டாஸ் வென்ற கில்.. இந்தியாவுக்காக அறிமுகமான 3 வீரர்கள்.. பிளேயிங் லெவன்

ஏற்கனவே இந்திய அணியின் துவக்க வீரருக்கான இடத்திற்கு பலரும் போட்டியில் இருப்பதால் கிடைத்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்தி ருதுராஜ் கெய்க்வாட் அதனை சரியாக பயன்படுத்தி நிலையான இடத்தினை பிடிக்க வேண்டும் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -