முதல் ஜிம்பாப்வே டி20யில் டாஸ் வென்ற கில்.. இந்தியாவுக்காக அறிமுகமான 3 வீரர்கள்.. பிளேயிங் லெவன்

Shubman Gill 2
- Advertisement -

ஐசிசி 2024 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த தொடரில் அனைத்து இந்திய சீனியர் வீரர்களுக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டது. அதனால் சுப்மன் கில் ஐபிஎல் 2024 தொடரில் அசத்திய இளம் வீரர்களுடன் இத்தொடரில் இந்தியா களமிறங்கியுள்ளது. அந்த நிலையில் 5 போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் போட்டி ஜூலை 6ஆம் தேதி துவங்கியது.

ஜிம்பாப்வே தலைநகர் ஹராரே நகரில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. குறிப்பாக 11 வருடங்கள் கழித்து ஐசிசி தொடரில் வெற்றி கண்ட தங்கள் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதாக கேப்டன் சுப்மன் கில் தெரிவித்தார். அத்துடன் இந்திய அணியில் 3 வீரர்கள் அறிமுகமாக களமிறங்குவதாகவும் அவர் அறிவித்தார்.

- Advertisement -

இந்திய அணி:
முதலில் 2024 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியில் 484 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்றார். அதே போல ராஜஸ்தான் அணியில் அசத்திய துருவ் ஜுரேல் சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி நன்றாக விளையாடினார். அதனால் டி20 கிரிக்கெட்டிலும் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அவர்களுடன் ராஜஸ்தான் மிடில் ஆர்டரில் அசத்திய ரியான் பராக் இப்போட்டியில் அறிமுகமாக இந்தியாவுக்கு களமிறங்கும் வாய்ப்பை பெற்றார். அத்துடன் தமிழக வீரர் வாசிங்டன் சுந்தர் ப்ளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார். இது பற்றி டாஸ் வென்றதும் சுப்மன் கில் பேசியது பின்வருமாறு. “நாங்கள் முதலில் பந்து வீசுகிறோம். பிட்ச் நன்றாக இருப்பது போல் தெரிகிறது. அது நேரம் கழித்தும் மாறாது. நாங்கள் 11 வருடங்கள் கழித்து ஐசிசி தொடரில் வெற்றி பெற்றுள்ளோம். எனவே உங்கள் மீது எப்போதும் கொஞ்சம் எதிர்பார்ப்பு இருக்கும்”

- Advertisement -

“எங்களுக்கு 3 வீரர்கள் அறிமுகமாகின்றனர். அபிஷேக் ஷர்மா, ரியான் பராக், துருவ்” என்று கூறினார். அந்த வகையில் இந்தத் தொடரில் ஓய்வு பெற்ற கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடிய ஓப்பனிங் இடத்தில் சுப்மன் கில் – அபிஷேக் ஷர்மா ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்குகின்றனர். இதைத் தொடர்ந்து முதல் போட்டியிலேயே வென்று இத்தொடரை வெற்றியுடன் துவக்கும் முனைப்புடன் இந்தியா விளையாடுகிறது.

இதையும் படிங்க: இந்திய அணியின் பிரச்சனையை அவர் தீர்ப்பாரு.. ஜிம்பாப்வே தொடரில் சரியா யூஸ் பண்ணனும்.. சபா கரீம்

ஜிம்பாப்வே முதல் டி20 போட்டியில் விளையாடும் 11 பேர் இந்திய அணி: சுப்மன் கில் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ரியான் பராக், ரிங்கு சுங்க, துருவ் ஜுரேல் (கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ரவி பிஸ்னோய், ஆவேஷ் கான், முகேஷ் குமார், கலீல் அஹ்மத்

Advertisement