Qualifier 1 : குஜராத் பவுலர் செய்த பிழையால் விக்கெட்டில் இருந்து தப்பி பொளந்து கட்டிய ருதுராஜ் கெய்க்வாட் – நடந்தது என்ன?

Nalkande
- Advertisement -

சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான முதலாவது குவாலிபயர் போட்டியானது இன்று சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது. அந்த வகையில் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.

CSK vs GT

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்துள்ளது. அதனை தொடர்ந்து 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது குஜராத் அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது சென்னை அணியின் சார்பாக துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிகபட்சமாக 44 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 60 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இந்த போட்டியில் 2 ரன்கள் எடுத்திருந்த போது விக்கெட்டில் இருந்து தப்பிய ருதுராஜ் கெய்க்வாட் 60 ரன்கள் குவித்தார்.

Ruturaj-Gaikwad

ஒருவேளை அப்படி அவர் 2 ரன்களிலேயே ஆட்டம் இழந்திருந்தால் நிச்சயம் சிஎஸ்கே அணி இன்னும் தடுமாற்றத்தை சந்தித்திருக்கும். அந்த வகையில் இந்த போட்டியின் போது இரண்டாவது ஓவரை வீசிய குஜராத் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான நல்கண்டே அந்த ஓவரின் மூன்றாவது பந்தினை மெதுவாக வீச அதனை சரியாக டைமிங் செய்யாத ருதுராஜ் கவர் திசையில் நின்று கொண்டிருந்த சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்தார்.

- Advertisement -

ஆனால் ரிப்ளைவின்போது நல்கண்டே தவறுதலாக நோபால் வீசியிருந்தது தெரியவந்தது. அதன் காரணமாக நோபால் வழங்கப்பட்டு ருதுராஜ் அவுட் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு அடுத்த பிரி ஹிட் பந்தில் சிக்ஸரும், அதற்கு அடுத்த பந்தில் பவுண்டரியும் அடித்த ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் அடித்து அசத்தினார்.

இதையும் படிங்க : தோனி பேச்சை கேட்டா அவ்ளோ தான், இதை செஞ்சா பதிரனா என்னை விட பெஸ்ட்டா வருவாரு – மலிங்கா பேட்டி

அதோடு இந்த இன்னிங்சின் முடிவில் 60 ரன்கள் எடுத்த அவர் குஜராத் அணிக்கெதிராக இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளிலுமே அரைசதம் அடித்த வீரராகவும் முத்திரை பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement