
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஜனவரி 11-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. ஏற்கனவே அண்மையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
அதனை தொடர்ந்து நடைபெற இருக்கும் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரானது தற்போதே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி வரும் ஜனவரி 3 அல்லது 4-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. ஒருநாள் போட்டிகளை பொருத்தவரை கேப்டன் சுப்மன் கில் தொடர்ச்சியாக கேப்டனாக நீடிப்பார் என்று தெரிகிறது.
அதேவேளையில் காயம் காரணமாக தென்னாப்பிரிக்க தொடரை தவறவிட்ட துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கம்பேக் கொடுக்கலாம் என்று கூறப்பட்டுகிறது. ஒருவேளை நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெற முடியாமல் போகும் பட்சத்தில் அவருக்கு பதிலாக விளையாடப் போவது யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
ஏற்கனவே தென்னாப்பிரிக்க தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தவறவிட்ட போது அவரது இடத்தில் நான்காவது வீரராக களமிறங்கி விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் முதல் போட்டியில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து இருந்தாலும் இரண்டாவது போட்டியின் போது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 83 பந்துகளில் 105 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார்.
இந்த தென்னாப்பிரிக்க தொடரில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்த அவர் ஒருநாள் போட்டிகளிலும் தான் விளையாட தயார் என்பதை நிரூபித்திருந்தார். இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணித்தேர்வு இன்னும் சில தினங்களில் நடைபெறயிருக்கிறது.
இதையும் படிங்க : ஒரு இடத்துக்கு 3 பேர் போட்டி.. ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைக்கபோவது யாருக்கு? – விவரம் இதோ
இவ்வேளையில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே தொடரில் விளையாடி வரும் அவர் மகாராஷ்டிரா அணிக்காக மிடில் ஆர்டரில் 113 பந்துகளை சந்தித்து 3 சிக்ஸர் மற்றும் 12 பவுண்டரி என 124 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். இதன் காரணமாக இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் அவர் மிடில் ஆர்டரில் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.