இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது டி20 போட்டியானது நேற்று ஹராரே நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்துக் கொண்டது.
அதோடு இந்த தொடரையும் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் இந்த தொடரையும் சமன் செய்துள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சை சிதறடித்து 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் குவித்தது.
இந்திய அணி சார்பாக இந்த போட்டியில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 100 ரன்கள் அடிக்க மற்றொருபுறம் ருதுராஜ் கெய்க்வாட் 47 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரி, ஒரு சிக்சர் என 77 ரன்கள் குவித்து அசத்தினார்.
முதல் போட்டியில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்த நிலையில் தற்போது இரண்டாவது போட்டியில் 77 ரன்கள் விளாசி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியில் நிரந்தர இடமின்றி தவித்து வரும் அவர் இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிரந்தர இடம் பிடிக்கும் என்பதனால் இந்த போட்டியில் அவர் விளையாடிய ஆட்டம் அனைவரது மத்தியிலும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று அவர் விளையாடிய ஆட்டம் தல தோனிக்கு அவர் வழங்கிய பிறந்தநாள் பரிசு என்று ரசிகர்கள் அவரது இந்த இன்னிங்க்ஸை பாராட்டி வருகின்றனர். ஏனெனில் ஜூலை 7-ஆம் தேதி தனது 43 வது பிறந்த நாளை கொண்டாடிய தோனிக்கு 7 ஆம் நம்பர் எண் ராசியானது.
இதையும் படிங்க : அவங்க 2 பேர் ஆடுன அட்டகாசமான இன்னிங்ஸ் தான் வெற்றிக்கு காரணம் – கேப்டன் சுப்மன் கில் அளித்த பேட்டி
இந்நிலையில் நேற்று வீடியோ கால் மூலம் பேசிய ருதுராஜ் கெய்க்வாட் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதோடு அதே நாளன்று 77 ரன்கள் அடித்து இரட்டிப்பாக அவருக்கு பிறந்தநாள் பரிசு வழங்கியுள்ளார் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.



