IND vs NZ : நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரிலிருந்து விலகிய இந்திய வீரர் – அடபவாமே இதுதான் காரணமா?

Hardik-Pandya
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க இருக்கிறது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை ஜனவரி 27-ஆம் தேதி முதல் பிப்ரவரி 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

INDvsNZ

ஏற்கனவே இந்த ஒருநாள் தொடரில் தோல்வியை சந்தித்து நியூசிலாந்து அணியானது இம்முறை அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த டி20 தொடரை குறிவைத்து தயாராகி வருவதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

- Advertisement -

அதே வேளையில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் இந்த தொடரில் இடம் பெறாததால் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே இந்த தொடரில் பங்கேற்க இருப்பதால் அவர்களது மீதும் அதிகளவில் எதிர்பார்ப்பு இருந்துள்ளது .

Ruturaj-Gaikwad

இந்நிலையில் இந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் இடம் பிடித்திருந்த இளம் துவக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் இந்த தொடரில் இருந்து வெளியேறியதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அதன்படி ஏற்கனவே இந்த டி20 தொடருக்கு முன்னதாக பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வந்த ருதுராஜ் கெய்க்வாட் பயிற்சியின்போது மணிக்கட்டு பகுதியில் காயம் ஏற்பட்டதாக தெரிவித்திருந்தார். பின்னர் அவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் அவரால் இந்த காயத்துடன் இந்த டி20 தொடரில் விளையாட முடியாது என்றும் எனவே இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து அவர் அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அவர் இல்லாம 3 வகையான கிரிக்கெட்டே இல்ல, அசால்ட்டா சதங்களை அடிப்பாரு – நட்சத்திர வீரருக்கு ரெய்னா ஆதரவு

ஏற்கனவே தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வரும் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இம்முறை வாய்ப்பு கிடைத்த வேளையில் தற்போது காயம் காரணமாக மீண்டும் அந்த வாய்ப்பை இழந்துள்ளது ரசிகர்கள் மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement