வெளியே போவார் என்று எதிர்பார்த்த வேளையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோனியிடம் பாராட்டு பெற்ற – இளம்வீரர்

Ruturaj

சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரராக கடந்த சீசனிலருந்தே களம் இறங்கி வருகிறார் சென்னை அணியின் இளம் வீரரான ருத்ராஜ் கெய்க்வாட். கடந்த சீசனின் கடைசி மூன்று ஆட்டத்தில் தொடர்ச்சியாக மூன்று அரை சதங்களை அடித்து தனது திறமையை நிரூபித்து இருந்தார். எனவே தோனிக்கு பிறகு ஒரு சிறந்த சென்னை அணியை கட்டமைப்பதற்காக ருத்துராஜ் கெய்க்வாட்டை அணியில் தக்கவைத்துக் கொண்டது சென்னை அணி நிர்வாகம்.

ruturaj

ஆனால் இந்த ஐபிஎல் தொடரின் முதல் 3 ஆட்டங்களிலும் தனது திறமையை நிரூபிக்க தவறினார் ருத்துராஜ் கெய்க்வாட். கடந்த மூன்று போட்டிகளிலும் சேர்த்து அவர் எடுத்த ரன்கள் 10 மட்டுமே. எனவே அவரை அணியிலிருந்து வெளியேற்றிவிட்டு உத்தப்பாவிற்கு வாய்ப்பு வழங்குமாறு ரசிகர்களிடம் இருந்து கோரிக்கை எழுந்தது. ஆனால் சென்னை அணி அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்தது.

இதற்கிடையில் நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தனது திறமையை நிரூபித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கினார் ருத்துராஜ். இப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அவர் ஆரம்பத்தில் இருந்தே அடித்து ஆடினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருத்துராஜ் 42 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டுயூப்ளசிஸுடன் இணைந்து இவர் ஏற்படுத்திக்கொடுத்த வலுவான பார்ட்னர்ஷிப்பே சென்னை அணி நேற்றைய போட்டியில் 220 ரன்கள் அடிக்க முக்கியமான காரணமாகும்.

Ruturaj-3

நேற்றைய அதிரடி ஆட்டத்தின் மூலம் இழந்த தனது பழைய ஃபார்மை மீட்டெடுத்து இருக்கிறார் இளம் வீரரான ருத்துராஜ். போட்டி முடிந்ததும் பேட்டியளித்த ருத்துராஜ், அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனியும், அணியின் பயிற்சியாளரான ஸ்டீபன் பிளம்மிங்கும் தன் மேல் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாகவும், அந்த நம்பிக்கையே எனது பழைய ஃபார்மை மீட்டுக் கொண்டுவர உதவியதாகவும் கூறினார். மேலும் இனி வரும் போட்டிகளில் இதுபோல் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகிப்பேன் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

- Advertisement -

kkr

ருத்துராஜ் தொடர்ந்து சொதப்பி வந்தாலும் அவரின் மேல் உள்ள நம்பிக்கையால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கி வந்தனர் மகேந்திரசிங் தோணி மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங். அதனை நியாயப்படுத்தும் விதமாக நேற்றைய போட்டியில் தனது திறமையை நிரூபித்துள்ளார் ருத்துராஜ். இனிவரும் போட்டிகளிலும் அவர் சிறப்பாக செயல்பட்டு எதிர்கால சென்னை அணியின் முக்கிய வீரராக இருப்பார் என்ற நம்பிக்கை அனைவரிடமும் எழுந்துள்ளது.