பேஸ்புக்ல சொன்னப்பவே எல்லாரும் கேட்டாங்க.. 2023லயே தோனி ஹிண்ட் கொடுத்தாரு.. பின்னணியை பகிர்ந்த ருதுராஜ்

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து ஜாம்பவான் எம்எஸ் தோனி விலகுவதாக அறிவித்துள்ளார். ஐபிஎல் துவங்கப்பட்ட 2008 முதல் அவருடைய தலைமையில் 14 சீசனங்களில் களமிறங்கிய சென்னை 12 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி 10 ஃபைனல்களில் விளையாடி 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக மாபெரும் சாதனை படைத்துள்ளது.

அதே போல 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் சிஎஸ்கே அணிக்காக வென்றுள்ள எம்எஸ் தோனி வரலாற்றின் மகத்தான கேப்டனாக போற்றப்படுகிறார். இருப்பினும் 41 வயதை கடந்து விட்ட அவர் காலத்திற்கும் விளையாட முடியாது என்பதால் இளம் வீரர் ருதுராஜ் கைக்வாட் கையில் கேப்டன்ஷிப் பொறுப்பை ஒப்படைப்பதாக சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.

- Advertisement -

போன வருஷமே:
இந்நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை ஒப்படைப்பது பற்றி போன வருடமே தோனி தம்மிடம் மறைமுகமாக தெரிவித்ததாக ருதுராஜ் கூறியுள்ளார். மேலும் சமீபத்தில் பேஸ்புக் பக்கத்தில் புதிய ரோல் என்று தோனி பதிவிட்ட போது “நீங்கள் தான் சென்னையின் புதிய கேப்டனா” என்று அனைவரும் தம்மிடம் கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே இந்த பொறுப்பை தோனி தம்மிடம் ஆச்சரியப்படும் வகையில் வழங்கவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இதற்காக நான் மாற வேண்டும் என்று நினைக்கவில்லை. ஏதோ ஒரு தருணத்தில் கேப்டன்ஷிப் பொறுப்பை கொடுப்பேன் என்று கடந்த வருடமே தோனி மறைமுகமாக தெரிவித்திருந்தார். அது உங்களுக்கு ஆச்சரியமாக வராது என்பதால் இந்த பொறுப்பை ஏற்க தயாராக இருங்கள் என்று தோனி கூறியிருந்தார்”

- Advertisement -

“எனவே இம்முறை சிஎஸ்கே அணிக்காக விளையாட வந்த போது அவர் வலைப்பயிற்சிகளை செய்தார். சமூக வலைத்தளத்தில் அவர் புதிய வேலை என்று பதிவிட்டது எனக்கு நினைவிருக்கிறது. அப்போது அனைவரும் நீங்கள் தான் அடுத்த கேப்டனா என்று என்னிடம் கேட்டனர். இருப்பினும் அந்தப் பதிவு வேறு எதற்காகவாவது இருக்கும் என்று நான் கருதினேன். ஆனால் கடந்த வாரம் வந்த அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொன்னார்”

இதையும் படிங்க: கேப்டன் பதவியில் இருந்து விலகிய தோனி குறித்து எமோஷனல் ஸ்டோரி போட்ட ரோஹித் சர்மா – வைரலாகும் பதிவு

“அதனாலேயே நான் இங்கு இருக்கிறேன். அவர் கொடுத்த இந்த வேலையை செய்வதற்காக காத்திருக்கிறேன்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இன்று துவங்கும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பெங்களூருவை நடப்பு சாம்பியன் சென்னை எதிர்கொள்கிறது. அந்த போட்டியில் தோனிக்கு பதிலாக ருதுராஜ் சிஎஸ்கே அணியை முதல் முறையாக வழி நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement