- Advertisement -
ஐ.பி.எல்

அந்த 2 முன்னாள் வீரர்களை மிஸ் பன்றோம்.. 180 கூட சேசிங் பண்ண முடியாம சிஎஸ்கே தோற்க இதான் காரணம்.. ருதுராஜ்

ஐபிஎல் 2025 மார்ச் 30ஆம் தேதி கௌகாத்தியில் நடைபெற்ற 11வது போட்டியில் சென்னை அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வீழ்த்தி வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் 182-9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நிதீஸ் ராணா 81, கேப்டன் ரியான் பராக் 37 ரன்கள் எடுத்த நிலையில் சென்னைக்கு அதிகபட்சமாக கலீல் அகமது, நூர் அஹ்மத், பதிரனா தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

அடுத்ததாக விளையாடிய சென்னைக்கு ரச்சின் ரவீந்திரா டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். கேப்டன் ருதுராஜ் போராடி 63 ரன்கள் எடுத்தார். ஆனால் அவரைத் தவிர்த்து ராகுல் திரிபாதி 23, சிவம் துபே 18, விஜய் சங்கர் 9 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர் ஜடேஜா 32*, தோனி 16, ஓவர்டன் 11* ரன்கள் எடுத்தோம் பினிஷிங் செய்ய முடியவில்லை.

- Advertisement -

ரஹானே, ராயுடு மிஸ்:

அதனால் 20 ஓவரில் 176-6 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை தங்களது இரண்டாவது தோல்வியை பதிவு செய்தது. முதல் வெற்றியைப் பெற்ற ராஜஸ்தானுக்கு அதிகபட்சமாக ஹஸரங்கா 4 விக்கெட்டுகளை சாய்த்தார். முன்னதாக ஒரு காலத்தில் அசால்டாக 200 ரன்களை சேசிங் செய்யக்கூடிய சென்னை இப்போதெல்லாம் 180 கூட அடிக்க முடியாமல் தோற்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் அதற்கு உதவிய ராயுடு, ரஹானேவை தற்போது மிஸ் செய்வதாக கேப்டன் ருதுராஜ் தெரிவித்துள்ளார். மேலும் பவர்பிளேவில் ரன்கள் எடுக்காதது தோல்விக்கு காரணம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பவர்பிளே முக்கிய தருணம். அங்கே நிதிஷ் சிறப்பாக பேட்டிங் செய்தார். ஸ்கொயர் பகுதியில் பலத்தைக் கொண்டிருப்பார் என்று தெரிந்திருந்த நாங்கள் அவரை விக்கெட்டுக்கு முன்பாக விளையாட வைத்திருக்க வேண்டும்”

- Advertisement -

ஒன்றாக வருவோம்:

“8 – 10 ரன்கள் சுமாரான ஃபீல்டிங் காரணமாக விட்டோம். அதில் முன்னேற வேண்டும். 180 தொடக்கூடிய இலக்காகும். நீங்கள் சரியாக அடித்தால் அதை பாக்கெட்டில் போட்டிருக்கலாம். ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் 210 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் இருந்தனர். கடந்த வருடங்களில் ரஹானே, ராயுடு ஆகியோர் மிடில் ஆர்டரை கவனித்துக் கொண்டனர். எனவே திரிபாதி துவக்க வீரராக அதிரடியாக விளையாடி நான் மிடில் ஆர்டரில் கொஞ்சம் தாமதமாக வந்தால் சரியாக இருக்கும் என்று நினைத்தேன்”

இதையும் படிங்க: 6 ரன்ஸ்.. 9க்கு 9 தோல்வி.. சேசிங்கில் பவர் இல்லாமல் ஃபியூஸ் போகும் சிஎஸ்கே.. ராஜஸ்தான் த்ரில் வெற்றி

“எப்படியிருந்தாலும் அதை காரணமாக சொல்ல முடியாது. இது ஏலத்தில் முடிவு செய்யப்பட்டது என்பதால் எந்த பிரச்சனையும் இல்லை. தேவைப்பட்ட போது நான் ரிஸ்க் எடுத்து ஸ்ட்ரைக்கை மாற்றினேன். துரதிஷ்டவசமாக எங்களுக்கு பேட்டிங்கில் நல்ல துவக்கம் கிடைக்கவில்லை. இவற்றை சரி செய்யும் போது முடிவுகள் வித்தியாசமாக வரும். நூர் அஹ்மத், கலீல், ஜடேஜா பாய் நன்றாக பவுலிங் செய்வது நேர்மறையாகும். அந்த பவுலிங் துறையுடன் சேர்ந்து அனைத்தும் வரும் போது எங்களுடைய அணி நன்றாகத் தெரியும்” என்று கூறினார்.

- Advertisement -