ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கேப்டன் பதவியை வழங்கியது போல் வழங்கி ஆப்பு வைத்த பி.சி.சி.ஐ – என்ன நடந்தது?

Ruturaj
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் துவக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணிக்காக கடந்த 2021-ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 23 டி20 போட்டிகள் மற்றும் 6 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார். சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட் மிகச் சிறப்பான வீரராக இருந்தும் அவருக்கு இந்திய அணியில் தொடர்ச்சியான வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறது.

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இடமில்லை :

அபாரமான திறமை கொண்ட அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்திய அணியில் பல்வேறு வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கும் வேளையில் ருதுராஜ் கெய்க்வாடும் இந்திய அணியின் நிரந்தர வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

- Advertisement -

டி20 போட்டிகளில் அட்டகாசமான செயல்பாட்டை வெளிப்படுத்தும் அவருக்கு பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு அவரது அந்த வாய்ப்பையும் பறித்துள்ளதாக தெரிகிறது.

ஏனெனில் அண்மையில் நடைபெற்ற துலீப் டிராபி தொடரில் அசுத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி மீண்டும் இராணி கோப்பை தொடருக்கான ரெஸ்ட் ஆப் இந்தியா இந்திய அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்படி ஒருபுறம் அவருக்கு கேப்டன் பதவியை பி.சி.சி.ஐ வழங்கி இருந்தாலும் அதற்கு பின்னால் உள்ள காரணம்தான் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் இராணி கோப்பை தொடரானது நடைபெறும் போது தான் வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்நிலையில் தற்போது அவர் இராணி கோப்பை தொடருக்கான ரெஸ்ட் ஆப் இந்திய அணியின் கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டுள்ளதால் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இல்லை.

இதையும் படிங்க : தோனிக்கு பதிலாக 32 வயதான விக்கெட் கீப்பரை தட்டித்தூக்கவுள்ள சி.எஸ்.கே – மாஸ் திட்டம் இதோ

அதேவேளையில் மற்றொரு துவக்க வீரரான சுப்மன் கில்லை இந்திய அணி அடுத்த கேப்டனாக மாற்றும் முயற்சியினால் தான் தற்போது ருதுராஜ் கெய்க்வாட்டை தொடர்ந்து பிசிசிஐ நிராகரித்து வருவதாகவும் தெரிகிறது.

Advertisement