இந்த ஒரு சி.எஸ்.கே வீரரால் நிறைய பேருக்கு ஆப்பு இருக்கு. இவரே அடுத்த சி.எஸ்.கே ஸ்டார் – விவரம் இதோ

csk
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருடம் சரியாக விளையாடவில்லை. அந்த அணியின் முழு திறமையை வெளிப்படுத்தவில்லை. ஐ.பி.எல் வரலாற்றில் அனைத்து தொடர்களிலும் பிளே ஆப் சென்ற ஒரே அணி அதுதான். இந்த சாதனையை சென்னை அணியிடம் மட்டுமே இருந்தது. ஆனால் இந்த வருடம் பிளே-ஆப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறிவிட்டது.

- Advertisement -

ஆனால் கடைசி சில போட்டிகளில் நன்றாக ஆடி தொடர்ந்து மூன்று வெற்றிகளை பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடைசியாக நடைபெற்ற சில போட்டிகளில் துவக்க வீரராக இளம் வீரர் ருதுராஜ் களமிறக்கப்பட்டார். தொடர்ச்சியாக மூன்று அரை சதங்கள் அடித்து அணியை வெற்றிபெற வைத்திருக்கிறார்.

அதிலும் மூன்று போட்டிகளிலும் ஆட்ட நாயகன் விருது பெற்றுவிட்டார் ருதுராஜ் மேலும் சென்னை அணிக்காக தொடர்ந்து மூன்று அரை சதங்கள் அடித்த ஒரே வீரர் இவர்தான் என்ற பெருமையும் பெற்று விட்டார். இவரது அதிரடியான ஆட்டத்தின் காரணமாக அணியில் பல சீனியர் வீரர்களுக்கு பிரச்சனைகள் உள்ளது.

Ruturaj

இவர் நன்றாக ஆடி விட்டதால் அடுத்த வருடம் அனைத்து சீனியர் வீரர்களும் வெளியேற்றப்படுவார்கள். மேலும் மற்றொரு தொடக்க வீரரான ஜெகதீசன் அடுத்த வருட அணியில் இருப்பது கேள்விக்குறிதான் அதனால் முற்றிலுமாக அணி மாறி கட்டமைக்கப்படும் என்று தெரிகிறது.

csk 1

ருதுராஜ் நன்றாக ஆடி ஜெகதீசன் ஒரு போட்டியில் சொதப்பி விட்டாலும் அவரும் வெளியேற்றப்படுவார் என்ற நிலைதான் நீடித்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அடுத்த வருடத்திற்கான அணியை கட்டமைக்க போகிறோம் என்று தோனி கூறியுள்ளார். இப்படிப் பார்த்தால் அடுத்த வருடம் பல வீரர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்பது உறுதியாகிவிட்டது.

Advertisement