ஐ.பி.எல் தொடரில் கலக்கிய ருதுராஜ் கெய்க்வாட்க்கு கிடைத்த கவுரவம் – தேடி வந்த பதவி (மச்சக்காரர் தான்)

ruturaj
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் அண்மையில் 14-வது ஐபிஎல் தொடர் நடைபெற்று முடிந்தது. அடுத்து இந்த தொடரில் பங்கேற்ற இந்திய வீரர்கள் அனைவரும் நாடு திரும்பியுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் இந்த உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களை தவிர மற்ற உள்ளூர் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் விளையாடும் அனைவரும் நாடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் தற்போது இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் தொடரான சையது முஷ்டாக் அலி டி20 ஓவர் தொடரானது தற்போது நடைபெற உள்ளது.

dhoni 2

- Advertisement -

இந்த தொடரில் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த வீரர்களும் தங்களது மாநில அணிக்காக விளையாட உள்ளனர். அந்த வகையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக ரன்களை குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றிய சென்னை அணியை சேர்ந்த முன்னணி இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் மகாராஷ்டிர அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார் என அம்மாநில கிரிக்கெட் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : வரும் 4-ஆம் தேதி முதல் சையது முஷ்டாக் அலி தொடர் துவங்க இருப்பதாகவும் அதில் ருதுராஜ் மஹாராஷ்டிரா கிரிக்கெட் அணியை வழிநடத்துவார் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

Ruturaj
Ruturaj Gaikwad

இந்த தொடரில் எலைட் ஏ பிரிவில் தமிழ்நாடு அணியை எதிர்த்து மகாராஷ்டிரா அணி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் 635 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீரராக ருதுராஜ் கெய்க்வாட் சாதித்த நிலையில் தற்போது அவருக்கு கேப்டன் பதவி கிடைத்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : ராகுல் டிராவிடிடம் இருந்து வந்த க்ரீன் சிக்னல். மகிழ்ச்சியில் பி.சி.சி.ஐ – ரசிகர்களும் ஹேப்பி தான்

ஏற்கனவே அவர் உள்ளூர் தொடரில் சில போட்டிகளில் கேப்டன் பதவி வகித்துள்ளதால் இந்த தொடரிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்பலாம். சையத் முஷ்டாக் அலி டி-20 தொடரை பொறுத்தவரை நடப்பு சாம்பியனாக தமிழக அணி இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement