ராகுல் டிராவிடிடம் இருந்து வந்த க்ரீன் சிக்னல். மகிழ்ச்சியில் பி.சி.சி.ஐ – ரசிகர்களும் ஹேப்பி தான்

Dravid
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ராகுல் ட்ராவிட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்திய இளம் வீரர்களை பயிற்றுவிக்கும் பொறுப்பில் இருந்து வருகிறார். குறிப்பாக அண்டர் 19 அணிக்கு பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் அதன்பிறகு தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருந்து வருகிறார். இவரது தலைமையின் கீழ் பயின்று வந்த பல இளம் வீரர்கள் தற்போது இந்திய அணியின் முன்னணி வீரர்களாக விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளரான ரவிசாஸ்திரியின் பதவிக்காலம் வரும் t20 உலகக்கோப்பையுடன் நிறைவுக்கு வருகிறது. இதையடுத்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக யார் நியமிக்க படப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக காணப்பட்டது. அதனை அடுத்து ரவிசாஸ்திரிக்கு பிறகு டிராவிட் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 10 கோடி ரூபாய் சம்பளத்தோடு பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்படுவார் என்ற தகவலும் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் அதற்கேற்றார் போல் தற்போது உலக கோப்பை தொடர் நடைபெற்று வர இந்த தொடர் முடிவடைந்ததும் 59 வயதான ரவி சாஸ்திரி பதவியிலிருந்து விலகுவார் என்றும் அதன் பிறகு ராகுல் டிராவிட் பதவியேற்பார் என்றும் தெரியவந்துள்ளது. அதனை உறுதி செய்யும் விதமாக தற்போது ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பொறுப்பிற்கு தான் செயல்பட விருப்பமாக இருப்பதாக விண்ணப்பித்துள்ளார்.

Dravid

இதன் காரணமாக தற்போது அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக மாறுவார் என்பது உறுதியாகி உள்ளது. மேலும் அவரிடம் இருந்து விண்ணப்பம் வந்துள்ளதால் நிச்சயம் ராகுல் டிராவிட் தவிர வேறு யாருக்கும் இந்த பதவி செல்லாது என்பதன் காரணமாக கிட்டத்தட்ட ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக வருவது உறுதியாகியுள்ளது. அதேவேளையில் ராகுல் டிராவிட் பதவி வகித்து வந்த தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவிக்கு லட்சுமணன் தேர்வு செய்யப்படுவார் என்றும் தெரிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : வருண் சக்ரவர்த்தி பவுலிங்கை தெருவில் விளையாடும் பசங்க கூட அடிப்பாங்க – சர்ச்சையை கிளப்பிய பாக் வீரர்

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு 60 வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது 59 வயதான ரவி சாஸ்திரி வெளியேற இருப்பதும் அந்த இடத்திற்கு டிராவிட் வரவிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ரவி சாஸ்திரியின் பதவி காலத்தில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் ஐசிசி கோப்பைகளை மட்டும் தவற விட்டுள்ளது என்பது சற்று ஏமாற்றம்தான்.

Advertisement