டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச முடிவு. அறிமுகமாகும் இளம் வீரர் – விவரம் இதோ

Dhoni
- Advertisement -

இந்த வருட ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது தோனியின் தலைமையிலான சென்னை சிஎஸ்கே அணி. இந்நிலையில் தற்போது இன்று நடைபெறும் இரண்டாவது நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

csk vs rr

இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஷார்ஜாவில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு முன்பாக பலம்வாய்ந்த மும்பை அணியை வீழ்த்தியதால் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது வெற்றியை பெறுமா ? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

- Advertisement -

அதன்படி முதலில் பந்துவீச தீர்மானம் செய்த தோனி அணியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பேசினார். அதில் இன்று 3 ஆவது வீரராக ராயுடு விளையாடமாட்டார் என்றும் அவருக்கு பதிலாக இளம்வீரர் ருதுராஜ் ஜெய்க்வாட் விளையாடுவார் என்று அறிவித்தார். அதைத்தவிர வேற எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இளம்வீரர்களை அதிகம் கொண்ட ராஜஸ்தான் அணியை எவ்வாறு சென்னை எதிர்கொள்ளப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் பலம் வாய்ந்த மும்பை அணியை வீழ்த்திய சென்னை அணி இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியையும் வீழ்த்தும் என்றே ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement