- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விராட் கோலியின் காயத்தால் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு அடித்த ஜாக்பாட் – விவரம் இதோ

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் முடிந்த கையோடு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாட காத்திருக்கிறது. இந்த தொடர்கான அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் இவ்விரு தொடர்களுக்குமான இந்திய அணியும் இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.

ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு அடித்துள்ள ஜாக்பாட் :

அந்த வகையில் முதலில் டெஸ்ட் தொடரானது நடைபெறும் என்றும் அதன் பின்னர் ஒருநாள் தொடரும் நடைபெற இருப்பதாக அட்டவணை வெளியாகி இருந்தது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் முன்னாள் கேப்டன்களும், அனுபவ வீரர்களுமான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருக்குமே இடம் வழங்கப்பட்டிருந்தது.

- Advertisement -

இந்நிலையில் ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடியிருந்த விராட் கோலி காயம் காரணமாக இந்த ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவரது காயம் குணமடைய இரண்டு வாரங்கள் வரை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த வேளையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டிக்கு முன்னர் அவர் அணிக்கு திரும்ப வாய்ப்பிருந்தது.

ஆனாலும் முன்னெச்சரிக்கை காரணமாக இந்த தொடரில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார். தற்போது விராட் கோலி விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக அந்த இடத்திற்கு சி.எஸ்.கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளன.

- Advertisement -

இதையும் படிங்க : சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த கே.எஸ் பரத் – விவரம் இதோ

ஏனெனில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடியிருந்த ருதுராஜ் கெய்க்வாட் முதல் போட்டியில் 4 பந்துகளில் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து இருந்தாலும் இரண்டாவது போட்டியின் போது 83 பந்துகளில் 105 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அதன் காரணமாக அவருக்கு மீண்டும் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

- Advertisement -