தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிராக டிசம்பர் 3ஆம் தேதி ராய்ப்பூரில் 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 359 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 105, விராட் கோலி 102, கேப்டன் ராகுல் 66 ரன்கள் குவித்து சதத்தை அடித்து அசத்தினார்கள்.
அடுத்ததாக விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49.2 ஓவரில் இலக்கைத் தொட்டு வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் சதமடித்து 110, கேப்டன் தெம்பா பவுமா 46, மேத்யூ 68, தேவால்ட் ப்ரேவிஸ் 54 ரன்கள் அடித்து அசத்தினார்கள். அதனால் 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து தென்னாப்பிரிக்கா பதிலடி கொடுத்துள்ளது.
4க்கு 4 தோல்வி:
மறுபுறம் பேட்டிங்கில் போதுமான ரன்கள் எடுத்தும் பந்து வீச்சில் சொதப்பிய இந்தியா பரிதாபமாக தோற்றது. அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதத்தை அடித்த போட்டியிலேயே ருதுராஜ் கெய்க்வாட் தோல்வியைத் தழுவி சோகத்தை சந்தித்தார் என்றே சொல்லலாம். அதை விட ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் சதத்தை அடித்த 4 போட்டிகளிலும் சிஎஸ்கே மற்றும் இந்திய அணி தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது.
முதல் முறையாக கடந்த 2021 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானுக்கு எதிராக ருதுராஜ் சதத்தை அடித்து அசத்தினார். ஆனால் அப்போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக 2023ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கௌஹாத்தியில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்தியாவுக்காக ருதுராஜ் சதத்தை அடித்து சாதனைகளை படைத்தார். துரதிஷ்டவசமாக அப்பபோட்டியிலும் இந்தியா மோசமாக பந்து வீசி தோல்வியை சந்தித்தது.
ருதுராஜை துரத்தும் சோகம்:
2024 ஐபிஎல் தொடரில் லக்னோவுக்கு எதிராக ருதுராஜ் சதத்தை அடித்தும் சிஎஸ்கே அணி மீண்டும் தோற்றது. தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் சதத்தை அடித்த போட்டியில் இந்தியா தோற்றுள்ளது. அந்த வகையில் ருதுராஜ் சதமடித்த 4 போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளார். இது மட்டுமின்றி 2023இல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவர் சதமடித்த போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 223 இலக்கை சேசிங் செய்து ஆஸ்திரேலியா வென்றது.
இதையும் படிங்க: இதுபோதும் இனிமே தொடர்ந்து ருதுராஜ் கெய்க்வாட்க்கு ஒன் டே டீம்ல சேன்ஸ் தாங்க – சீக்கா ஆதரவு
அதனால் டி20 கிரிக்கெட்டில் தங்களுடைய அதிகபட்ச இலக்கை கட்டுப்படுத்த முடியாமல் இந்தியா மோசமான சாதனைத் தோல்வியை சந்தித்தது. தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் தங்களுடைய அதிகபட்ச இலக்கை (359) கட்டுப்படுத்த முடியாமல் இந்தியா மோசமான சாதனை தோல்வியைச் சந்தித்துள்ளது. அந்த வகையில் ருதுராஜ் சதமடிக்கும் போட்டிகளில் அவரை சோகம் துரத்துவது குறிப்பிடத்தக்கது.



