ஒரே ஓவரில் 27 ரன்ஸ்.. யுவி, ரோஹித்துக்கு பின் அட்டகாசமான சாதனைகளை நிகழ்த்திய ருதுராஜ்.. லிஸ்ட் இதோ

ruturaj yuvraj singh
- Advertisement -

இந்தியாவை 2023 உலகக் கோப்பை ஃபைனலில் தோற்கடித்த ஆஸ்திரேலியா அடுத்ததாக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் 3வது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. குறிப்பாக முதலிரண்டு போட்டிகளின் அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து முன்னிலை பெற்ற இந்தியாவை 3வது போட்டியில் தோற்கடித்த ஆஸ்திரேலியா இந்த இருதரப்பு தொடரை கூட எளிதாக வெல்ல விடமாட்டோம் என்பதை காண்பித்துள்ளது.

நவம்பர் 28ஆம் தேதி கௌகாத்தியில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ருதுராஜ் கைக்வாட் சதமடித்து 123* (57) ரன்கள் எடுத்த உதவியுடன் 223 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு முக்கிய வீரர்கள் கைவிட்ட போதிலும் மிடில் ஆர்டரில் தன்னுடைய பவரை காட்டிய கிளன் மேக்ஸ்வெல் 104 ரன்அக்ள் விளாசி இந்தியாவுக்கு தோல்வியை பரிசளித்தார்.

- Advertisement -

அசத்திய ருதுராஜ்:
அதனால் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. அப்படி மோசமான பவுலிங் காரணமாக வெற்றி பறிபோன இப்போட்டியில் ருதுராஜ் கைக்வாட் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து இந்தியாவுக்கு மிகப்பெரிய ஸ்கோர் குவிப்பதற்கு உதவினார் என்றே சொல்லலாம். குறிப்பாக முதல் 21 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே எடுத்து நிதானமாக விளையாடிய அவர் நன்கு செட்டிலானக பின் ஆஸ்திரேலியா பவுலர்களை அடித்து நொறுக்கி 13 பவுண்டரி 7 சிக்சருடன் 123* (57) ரன்களை 215.79 என்ற ஸ்ட்ரைக் வெளுத்து வாங்கி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார்.

அதிலும் குறிப்பாக 18வது ஓவரில் 24 ரன்கள் அடித்திருந்த அவர் மேக்ஸ்வெல் வீசிய 20வது ஓவரில் 27 ரன்கள் விளாசி சதத்தை அடித்தார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 18, 20வது ஓவரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன் 18வது ஓவரில் யுவராஜ் சிங் 23 ரன்களும் (2007இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) சூரியகுமார் யாதவ் 20வது ஓவரில் 26 ரன்களும் (2022இல் ஹாங்காங்க்கு எதிராக) எடுத்திருந்ததே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

அத்துடன் 13 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் சேர்த்து மொத்தம் 94 ரன்களை அவர் இப்போட்டியில் எடுத்தார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் பவுண்டரிகளால் மட்டுமே அதிக ரன்கள் அடித்த 2வது இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார். இதற்கு முன் கடந்த 2017ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ரோகித் சர்மா பவுண்டரிகளால் 108 ரன்கள் எடுத்து அந்த சாதனை பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

இதையும் படிங்க: கடைசி வரை எங்களால அவரை தடுத்து நிறுத்த முடியல.. எங்க பிளான் பலிக்கல – தோல்விக்கு பின்னர் சூரியகுமார் பேட்டி

இருப்பினும் இந்தியா வெற்றி பெற முடியாததால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தோல்வியை பதிவு செய்த போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் என்ற பரிதாப சாதனையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் 2022இல் இங்கிலாந்துக்கு எதிராக சூரியகுமார் யாதவ் 117 ரன்கள் எடுத்தது முந்தைய சாதனையாகும்.

Advertisement