முதல் 3 போட்டிகளிலும் சொதப்பல். இனியும் இவர் சி.எஸ்.கே அணிக்கு தேவையா ? – அழுத்தத்தில் கேப்டன் தோனி

Ruturaj

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்த ஆண்டு நடைபெற்று வரும் இந்த தொடரில் தங்களது திறமையை நிரூபிக்க பல இளம் வீரர்களை அணிக்குள் எடுத்தது மட்டுமின்றி சிறப்பான வீரர்களை அணியில் தேர்வு செய்து விளையாட வைத்து வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளில் ஒரு தோல்வி இரண்டு வெற்றி என சிஎஸ்கே அணி தற்போது ஆரம்பகட்டத்தில் நல்ல நிலையிலேயே உள்ளது.

chahar

இருப்பினும் இந்த சிஎஸ்கே அணியில் ஒரு முக்கிய பிரச்சனையாக ஒரு வீரரின் மோசமான ஆட்டம் பார்க்கப்படுகிறது. அந்த வீரர் வேறுயாருமில்லை துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தான். கடந்த ஐபிஎல் தொடரின்போது தான் கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளிலும் அரைசதம் அடித்து அசத்திய அவர் இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

குறிப்பாக டெல்லி அணிக்கு எதிரான முதல் போட்டியில் 8 பந்துகளை சந்தித்து 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து 2-வது போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக 16 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து இன்று தற்போது நடைபெற்று முடிந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் 13 பந்துகளை சந்தித்த அவர் 10 ரன்கள் மட்டுமே அடித்து வெளியேறியுள்ளார்.

gaikwad

ஏற்கனவே கடந்த ஆண்டு பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாட தொடக்க வீரர்கள் இல்லை என்று டிரேடிங் முறையில் ராபின் உத்தப்பாவை ராஜஸ்தான் அணியிடமிருந்து சிஎஸ்கே அணி வாங்கி இருந்தாலும் அவரை இதுவரை இந்த மூன்று போட்டியிலும் பயன்படுத்தவில்லை. ஆனால் இனிவரும் போட்டிகளில் நிச்சயம் உத்தப்பாவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தற்போது தோனி தள்ளப்பட்டுள்ளார்.

- Advertisement -

ruturaj 1

ஏனெனில் சிஎஸ்கே அணியில் ஜெகதீசன், உத்தப்பா, கிருஷ்ணாப்பா கவுதம், புஜாரா ஆகியோர் வாய்ப்புக்காக காத்திருக்கும் வேளையில் ருதுராஜின் மோசமான ஆட்டம் தோனியை புதிய முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளி உள்ளது குறிப்பிடத்தக்கது.