ஜெய்ஸ்வாலை நம்பி ஏமாந்த ருதுராஜ் கெய்க்வாட்.. 3 ஆவது இந்திய வீரராக மோசமான சாதனையில் இணைந்தார்

Ruturaj
- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியானது மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று துவங்கிய 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி இன்று நவம்பர் 23-ஆம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் துவங்கிய இந்த முதலாவது டி20 போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சூரியகுமார் யாதவ் இந்திய அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது இந்திய அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக அதிகபட்சமாக ஜாஸ் இங்கிலீஷ் 110 ரன்களையும் ஸ்டீவன் ஸ்மித் 52 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியானது முதல் ஓவரின் ஐந்தாவது பந்திலேயே முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. அதிலும் குறிப்பாக முதல் விக்கெட்டாக ருதுராஜ் ஆட்டமிழந்த விதத்தின் மூலம் அவர் மோசமான சாதனை பட்டியலில் மூன்றாவது இந்திய வீரராக பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார்.

அந்த வகையில் இன்றைய போட்டியின் போது முதல் ஓவரில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசி அட்டகாசமாக இன்னிங்ஸை ஆரம்பிக்க ஐந்தாவது பந்தினை லெக் சைடு திசையில் தட்டிவிட்டு ஒரு ரன் ஓடினார்.

- Advertisement -

பின்னர் பீல்டர் பந்தினை த்ரோ அடிப்பதற்கு முன்னதாக இரண்டாவது ரன்னிற்கு ஓடலாம் என்று மறுபுறம் இருந்த ருதுராஜ் கெய்க்வாட்டை இரண்டாவது ரன்னிற்கு ஓடிவருமாறு அழைத்தார். ஜெய்ஸ்வாலை நம்பி கெய்க்குவாடும் ஓடிவர பின்னர் ஜெய்ஸ்வால் மீண்டும் தான் ஓடிவந்த கிரீசிக்கு திரும்பினார்.

இதையும் படிங்க : ஆசையா மேட்ச் பாக்கலானு வந்தா இப்படியா பண்ணுவீங்க.. ஒளிபரப்பினால் ஏற்பட்ட சிக்கல் – கடுப்பாகிய ரசிகர்கள்

இதனால் அவரை நம்பி ஓடிவந்த ருதுராஜ் கெய்க்வாட் ரன் அவுட் ஆகினார். இதன்மூலம் அவர் படைத்த மோசமான சாதனை யாதெனில் : டி20 கிரிக்கெட்டில் பந்தை சந்திக்காமலே டைமண்ட் டக் அவுட்டாகிய மூன்றாவது இந்திய வீரர் என்ற மோசமான சாதனையில் அவர் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement