கம்பீர் கழற்றி விட்டா என்ன? தோனியின் நம்பிக்கையை பெற்ற ருதுராஜ்க்கு கிடைத்த 2வது மிகப்பெரிய வாய்ப்பு

Ruturaj Gaikwad 2
- Advertisement -

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார். குறிப்பாக ரோகித் சர்மா ஓய்வுக்கு பின் ஹர்திக் பாண்டியா புதிய டி20 கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் ஃபிட்டாக இல்லை என்று கருதும் கெளதம் கம்பீர் புதிய கேப்டனாக சூரியகுமாரை தேர்ந்தெடுத்துள்ளார். அதே போல துணை கேப்டனாக சுப்மன் கில்லை தேர்ந்தெடுத்துள்ள அவர் ருதுராஜ் கெய்க்வாட்டை கழற்றி விட்டது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் ஏற்கனவே ருதுராஜ் தலைமையில் இந்தியா 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது.

- Advertisement -

2வது வாய்ப்பு:
அதை விட ஜாம்பவான் தோனியின் நம்பிக்கையை பெற்ற அவர் சிஎஸ்கே ஐபிஎல் அணியில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அப்படிப்பட்ட அவருக்கு தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் இலங்கை டி20 தொடரில் பெஞ்சில் அமரும் வாய்ப்பை கூட கொடுக்கவில்லை. இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க உள்ளூர் தொடரான ரஞ்சிக்கோப்பை துவங்க உள்ளது.

அதில் மகாராஷ்டிரா அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக இதுவரை கேப்டனாக செயல்பட்டு வந்த கேதார் ஜாதவ் கடந்த ஜூன் மாதம் மூன்றாம் தேதி ஓய்வு பெறுவதாக அறிவித்தார். எனவே அவருக்கு பதிலாக தங்களுடைய மாநில அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்படுவார் என்று மகாராஷ்டிரா வாரியம் அறிவித்துள்ளது.

- Advertisement -

சொல்லப்போனால் ஏற்கனவே கடந்த சில வருடங்களாக மகாராஷ்டிரா வெள்ளைப்பந்து அணியின் கேப்டனாக ருதுராஜ் செயல்பட்டு வருகிறார். அவருடைய தலைமையில் ஏற்கனவே விஜய் ஹசாரே கோப்பை, சயீத் முஷ்டாக் அலி டி20 கோப்பை தொடர்களில் மகாராஷ்டிரா அணி விளையாடியுள்ளது. அந்த வரிசையில் தற்போது தம்முடைய மாநில ரஞ்சிக் கோப்பை அணியின் கேப்டனாக செயல்படும் வாய்ப்பும் ருதுராஜுக்கு கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: அர்ஷ்தீப் சிங்கிற்கு அடுத்து இடதுகை வேகப்பந்து வீச்சாளராக இவருக்கு தான் இனி வாய்ப்பு கிடைக்குமாம் – விவரம் இதோ

இந்த அறிவிப்பு சிஎஸ்கே ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ரஞ்சிக்கோப்பையில் கேப்டனாக செயல்படுவதால் அவருக்கு இன்னும் அதிகமான அனுபவம் கிடைக்கும். மொத்தத்தில் கௌதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் இந்திய அணியில் கழற்றி விட்டாலும் சிஎஸ்கே அணியை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தின் கேப்டனாக செயல்படும் மிகப்பெரிய கௌரவமான வாய்ப்பு ருதுராஜுக்கு கிடைத்துள்ளது. இதில் அசத்தும் பட்சத்தில் வருங்காலத்தில் இந்தியாவின் கேப்டனாகும் வாய்ப்பு கூட அவருக்கு கிடைக்கலாம்.

Advertisement