அர்ஷ்தீப் சிங்கிற்கு அடுத்து இடதுகை வேகப்பந்து வீச்சாளராக இவருக்கு தான் இனி வாய்ப்பு கிடைக்குமாம் – விவரம் இதோ

Khaleel
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியில் முன்பு முன்னாள் வீரரான ஜாஹீர் கான் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டது போன்று அவருக்கு அடுத்து வந்த எந்த ஒரு இடதுகை வேகப்பந்து வீச்சாளரும் சிறப்பாக செயல்படவில்லை. தற்போதைய இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் ஓரளவு நம்பிக்கை அளித்து தற்போது மெல்ல மெல்ல சிறப்பான பந்துவீச்சாளராக உருவெடுத்து வருகிறார்.

ஆனாலும் இந்திய கிரிக்கெட் அணியில் இனிவரும் காலங்களில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களை வளர்த்தெடுக்கும் நோக்கில் தற்போது கம்பீர் மற்றும் அகார்கர் ஆகியோர் பல புதிய முயற்சிகளை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

மேலும் உள்ளூர் கிரிக்கெட், ஐபிஎல் என இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் அசத்தும் பட்சத்தில் அவர்களை தேசிய அணியில் இணைத்து வாய்ப்பினை வழங்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் அர்ஷ்தீப் சிங் தற்போது சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் கூடுதலாக ஒரு இடது கை பவுலர் இடம்பெற வேண்டும் என்று உறுதியான முடிவினை எடுத்துள்ளனர்.

அதன்காரணமாகவே நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ரிசர்வ் வீரராக கலீல் அகமது தேர்வு செய்யப்பட்டிருந்தார். அதுமட்டும் இன்றி தற்போது இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளாராம்.

- Advertisement -

எனவே நிச்சயம் இந்த இலங்கை அணிக்கெதிரான தொடரில் கலீல் அகமதுவிற்கு ஒரு சில போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டு அவரது திறமை பரிசோதிக்கப்படும். மேலும் அர்ஷ்தீப் சிங் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக அணியில் நீடித்தாலும் அவருக்கு பேக்கப் வீரராக கலீல் அகமது இனி இந்திய அணியுடன் தொடர்ந்து பயணிப்பார் என்றும் தெரிகிறது.

இதையும் படிங்க : சூரியகுமார் யாதவால் நிச்சயம் அந்த விடயத்தில் சிறப்பாக செயல்பட முடியும் – முன்னாள் பீல்டிங் கோச் ஸ்ரீதர் கருத்து

அதேபோன்று இனிவரும் தொடர்களில் யாரெல்லாம் உள்ளூர் கிரிக்கெட்டில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களாக சிறப்பாக திகழ்கிறார்களோ அவர்களுக்கு தேசிய அணியில் வாய்ப்பு வழங்கி சோதனை நடத்தவும் வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement