சூரியகுமார் யாதவால் நிச்சயம் அந்த விடயத்தில் சிறப்பாக செயல்பட முடியும் – முன்னாள் பீல்டிங் கோச் ஸ்ரீதர் கருத்து

Sridhar
- Advertisement -

அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றியவுடன் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது ஓய்வு முடிவினை அறிவித்தார். அதோடு இந்திய அணியின் அனுபவ வீரர்களான விராட் கோலி மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோரும் இந்திய டி20 அணியில் இருந்து ஓய்வை அறிவித்தனர். இதன் காரணமாக இந்திய அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்படுவது உறுதியானது.

அந்த வகையில் ரோகித் சர்மாவுக்கு அடுத்து டி20 கிரிக்கெட்டில் ஹார்டிக் பாண்டியா தான் கேப்டனாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தனது சொந்த வாழ்க்கையில் தற்போது மிகப்பெரிய கடினமான சூழ்நிலையை சந்தித்திருக்கும் பாண்டியாவின் மனநிலையை கருத்தில் கொண்டு புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவை இந்திய அணி நிர்வாகமான பிசிசிஐ நியமித்தது.

- Advertisement -

அதன் காரணமாக தற்போது இலங்கை அணிக்கு எதிரான தொடரில் டி20 இந்திய அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவ் செயல்பட இருக்கிறார். மேலும் அவர் ஒரு சில தொடர்களில் தனது கேப்டன்சி திறமையை நிரூபித்து விட்டால் 2026-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலும் கேப்டனாக தொடர வாய்ப்புள்ளது.

இந்நிலையில் சூரியகுமார் யாதவின் கேப்டன் பதவி குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் கூறுகையில் : சூர்யாவை எனக்கு இளம் வயதில் இருந்தே தெரியும். அவர் இளம் வீரராக இருந்தபோது தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வந்து பயிற்சி செய்வார். அப்போதெல்லாம் ஆக்ரோஷமாகவே தான் இருப்பார்.

- Advertisement -

தற்போது நான் அவரை பார்க்கும் போது நல்ல முதிர்ச்சி அடைந்த கிரிக்கெட்டராக இருக்கிறார். பேட்டிங் செய்யும்போது யோசித்து பல்வேறு ஷாட்டுகளை விளையாடுகிறார். என்னை பொறுத்தவரை அவரால் நிச்சயம் நல்ல கேப்டனாகவும் சாதிக்க முடியும். ஏனெனில் ஒரு கேப்டன் என்பவர் அணியில் உள்ள சூழ்நிலை புரிந்துகொண்டு வீரர்களுடன் சரியான முறையில் பேசி அணியை முறையாக கட்டமைத்து போட்டியின் போது நேர்த்தியாக கொண்டு செல்ல வேண்டும்.

இதையும் படிங்க : 30 லட்சம் இல்ல இனிமே 3 கோடி.. சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு நடிக்கவுள்ள ஜாக்பாட் – மெகா ஏலத்தில் நடைபெறவுள்ள மாற்றம்

சூர்யாவிற்கு இந்திய அணி வீரர்களுடன் நல்ல உறவு இருக்கிறது. அவரால் அவர்களை சரியாக கையாள முடியும் என்று நினைக்கிறேன். எனவே நிச்சயம் சூரியகுமார் யாதவ் தனக்கு எதிராக உள்ள சவால்களை உடைத்து சிறப்பான கேப்டன் என்பதை நிரூபிப்பார் என ஸ்ரீதர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement