எப்பா என்னா அடி ! ஒரேயொரு குறை ஆனால் பார்ட்னர்ஷிப்பில் ஆல் டைம் சாதனை படைத்த ருதுராஜ் – கான்வே மிரட்டல் ஜோடி

Ruturaj Gaikwad - Devon Conway CSK vs SRH
Advertisement

ஐபிஎல் தொடரில் மே 1-ஆம் தேதி நடைபெற்ற 46-ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் சென்னைக்காக 4 ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்து 2-வது வெற்றிகரமான ஐபிஎல் கேப்டன் என பெயரெடுத்த இந்தியாவின் நட்சத்திர ஜாம்பவான் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி கேப்டனாக மீண்டும் திரும்பியது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த நிலையில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இந்த போட்டியில் ராபின் உத்தப்பாவுக்கு பதில் நேற்று முன்தினம் தென்னாப்பிரிக்காவில் கல்யாணத்தை முடித்துவிட்டு சென்னையுடன் இணைந்த நியூசிலாந்தின் புது மாப்பிள்ளை டேவோன் கான்வே மற்றும் ருதுராஜ் கைக்வாட் ஆகியோர் இந்த வருடத்தின் முதல் போட்டிக்குப் பின் மீண்டும் முதல் முறையாக ஓப்பனிங் ஜோடியாக களமிறங்கினார்.

dhoni 1

அந்த நிலைமையில் தொடங்கிய இப்போட்டியில் தமிழக வீரர் நடராஜன், மேக்ரோன் யான்சென், உம்ரான் மாலிக் என மிரட்டலான பந்துவீச்சு கூட்டணியை கொண்ட ஹைதராபாத்தை முதல் ஓவரிலிருந்தே தில்லாத எதிர்கொண்ட இந்த ஜோடி ஆரம்பத்திலிருந்தே பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட தொடங்கியது.

- Advertisement -

மாஸ் ஜோடி:
இதில் ஒருபுறம் டேவோன் கான்வே ஆரம்பத்தில் நிதானத்தை கடைப்பிடிக்க மறுபுறம் சரவெடியாக பேட்டிங் செய்த ருதுராஜ் கைக்கவாட் ஒவ்வொரு ஓவரிலும் பட்டாசாக பவுண்டரிகளை பறக்கவிட்டார். பவர்பிளே முடிந்தும் பவராக விளையாடிய இந்த ஜோடியை பிரிக்க ஹைதெராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் போட்ட அத்தனை திட்டங்களையும் தவிடுபொடியாக்கிய இவர்கள் தொடர்ந்து அந்த அணிக்கு கருணையே காட்டாமல் மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இதில் அதிகமான அதிரடியை காட்டிய ருதுராஜ் ஹைதராபாத் மின்னல் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் வீசிய 145 கி.மீ வீசிய பந்துகளில் அசால்டாக சிக்சரை பறக்க விட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

Ruturaj Gaikwad - Devon Conway CSK vs SRH 2.jpeg

தொடர்ந்து பட்டைய கிளப்பிய அவர் அரை சதமடித்து சதத்தை நெருங்கிக் கொண்டிருக்க மறுபுறம் தனது பங்கிற்கு அதிரடியான பவுண்டரிகளை தெறிக்கவிட்ட டேவோன் கான்வே ருதுராஜ்க்கு ஈடாக ரன்களை சேர்த்து அரை சதம் கடந்தார். ஒரு கட்டத்தில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் பிரிய மாட்டேன் என அடம் பிடித்த இந்த ஜோடி மீண்டும் மீண்டும் ஹைதராபாத் பவுலர்களை புரட்டி எடுத்து மைதானத்திற்கு வந்து ரசிகர்களை ரன் மழையில் நனைத்தது.

- Advertisement -

ஒரேயொரு குறை:
நேரம் செல்ல செல்ல அதிரடியை அதிகரித்த இந்த ஜோடியில் அற்புதமாக பேட்டிங் செய்த ருதுராஜ் சதத்தை நெருங்கி 99 ரன்களை எடுத்திருந்தபோது துரதிஷ்டவசமாக தமிழக வீரர் நடராஜன் வீசிய 18-வது ஓவரில் 57 பந்துகளில் 6 பவுண்டரி 6 சிக்சருடன் 99 ரன்களில் ஆட்டமிழந்து அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார். முதல் விக்கெட்டுக்கு 182 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து அற்புதமாக பேட்டிங் செய்த இந்த ஜோடியில் ருதுராஜ் 99 ரன்களில் அவுட்டானது மட்டும் குறையாக மாறியது. அதனால் மனமுடைந்த அவர் கடும் ஏமாற்றத்துடன் பெவிலியன் நோக்கி திரும்பி செல்லும்போது அவரின் விக்கெட்டை எடுத்ததையும் கொண்டாடாத ஹைதெராபாத் பவுலர்கள் அவரின் தோளில் தட்டி பெவிலியனுக்கு அனுப்பி வைத்தனர்.

Ruturaj Kane Williamson

அந்த நிலையில் களமிறங்கிய எம்எஸ் தோனி 1 பவுண்டரியுடன் 8 (7) ரன்களில் ஆட்டமிழந்தாலும் மறுபுறம் அட்டகாசமாக பேட்டிங் செய்த டேவோன் கான்வே 8 பவுண்டரி 4 சிக்சர்கள் உட்பட 55 பந்துகளில் 85* ரன்கள் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். மொத்தத்தில் அற்புதமான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த சென்னை 202 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக தமிழகத்தின் நடராஜன் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

ஆல் டைம் பார்ட்னர்ஷிப் சாதனை:
இப்போட்டியில் முதல் விக்கெட்டுக்கு தெறிக்கவிடும் 182 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த ருதுராஜ் கைக்கவாட் – டேவோன் கான்வே ஜோடி ஒட்டுமொத்த ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் சென்னை அணிக்காக எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்கள் அமைத்த ஜோடி என்ற ஷேன் வாட்சன் – டுப்லஸ்ஸிஸ் சாதனையை முறியடித்து புதிய ஆல் டைம் சென்னை ஜோடியாக சாதனை படைத்தனர். அந்த விவரம் இதோ:
1. ருதுராஜ் கைக்வாட் – டேவோன் கான்வே : 182, ஹைதெராபாத்க்கு எதிராக, 2022*
2. ஷான் வாட்சன் – டு பிளேஸிஸ் : 181, பஞ்சாப்க்கு எதிராக, 2020

watson

2. அத்துடன் ஐபிஎல் வரலாற்றில் ஹைதராபாத் அணிக்கு எதிராக எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற ஏபி டிவில்லியர்ஸ் – விராட் கோலி சாதனையையும் உடைத்த இவர்கள் புதிய சாதனை படைத்தனர். அந்த விவரம் இதோ:
1. ருதுராஜ் கைக்வாட் – டேவோன் கான்வே : 182, 2022*
2. விராட் கோலி – ஏபி டிவில்லியர்ஸ், 2016

Advertisement