இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடிக்கவுள்ள 2 திறமையான வீரர்கள் – இடம் கிடைப்பது உறுதியாம்

IND
- Advertisement -

இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது வரும் 26-ஆம் தேதி துவங்கவுள்ளது. இந்த தொடருக்கான விராட் கோலி தலைமையிலான டெஸ்ட் அணி ஏற்கனவே பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் அங்கு நடைபெற இருக்கிறது. அந்த தொடருக்கான அணி இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. விரைவில் ஒருநாள் தொடருக்கான அணியும் தேர்வு செய்து அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

ind

- Advertisement -

ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்ட வேளையில் தற்போது காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து அவர் வெளியேறியுள்ளார். இந்நிலையில் ஒருநாள் தொடரில் அவரால் விளையாட முடியுமா ? என்பது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும். ஒருவேளை ரோகித் சர்மா விளையாட முடியாத பட்சத்தில் புதிய கேப்டன் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.

அதே வேளையில் அந்த ஒருநாள் அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது. குறிப்பாக தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிய வந்துள்ளது. அந்த வகையில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடும் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் மத்திய பிரதேச அணிக்காக விளையாடும் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரும் இடம்பிடிப்பது உறுதி என்று கூறப்படுகிறது.

gaikwad

அவர்கள் இருவரும் அட்டகாசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருவதால் கண்டிப்பாக இந்திய ஒருநாள் அணியில் இடம் பிடிப்பது உறுதி என்று பிசிசிஐ தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ச்சியாக மூன்று சதம் அடித்து அசத்தியுள்ளார். அதேபோன்று வெங்கடேஷ் ஐயரும் ஒரு சதம் அடித்தது மட்டுமின்றி பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : காயம் காரணமாக தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து வெளியேறிய ரோஹித் சர்மா – மாற்றுவீரர் அறிவிப்பு

அதனால் அவர் ஹார்டிக் பாண்டியாவுக்கு பதிலாக ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவது உறுதி என்று தெரிகிறது. அதேவேளையில் ஷிகர் தவானுக்கு பதிலாக ருதுராஜ் இந்திய அணியில் கண்டிப்பாக இடம் பிடிப்பார் என்று நம்பத்தகுந்த தகவல்கள் கிரிக்கெட் வட்டாரத்தில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement