ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் துவக்க வீரர்களாக களமிறங்க இந்த – 2 பேருக்கே வாய்ப்பு

Openers
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது நவம்பர் 23-ஆம் தேதியான இன்று முதல் துவங்க இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே ஏசியன் கேம்ஸ் தொடரில் தங்க பதக்கத்தை கைப்பற்றிய கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

அண்மையில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக களமிறங்க இருப்பதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

- Advertisement -

அதேவேளையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பைக்கு வீரர்களை தயார் படுத்தும் விதமாக வீரர்களை தேர்வு செய்துள்ளதால் இந்த தொடர் அனைவருக்குமே ஒரு முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த முதலாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடிப்பார்கள்? எந்தெந்த வீரர்கள் துவக்க வீரர்களாக களமிறங்குவார்கள்? என்பது குறித்த கேள்வி அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.

அந்த வகையில் இன்றைய போட்டியில் துவக்க வீரர்களாக களமிறங்க ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் இந்திய அணி எப்போதுமே வலதுகை இடதுகை வீரர்களையே துவக்க வீரராக களமிறக்க விரும்பும். அந்த வகையில் பார்க்கையில் ருதுராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரே துவக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் தற்போதுள்ள அணியில் இஷான் கிஷன் மூன்றாவது துவக்க வீரராக இருந்தாலும் அவர் 29 டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவத்துடன் உள்ளவர். அதோடு உலககோப்பை இந்திய அணியிலும் விளையாடியவர் என்பதால் அவர் மூன்றாவது இடத்தில் களமிறங்கினாலும் பிரச்சனை இல்லை என்பதனால் அவருக்கு மூன்றாவது இடத்தை வழங்கி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் ஆகிய இருவரே துவக்க வீரராக களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : விடைபெறும் ராகுல் டிராவிட்.. இந்தியாவின் அடுத்த கோச் யார்? போட்டியில் இருக்கும் 2 ஜாம்பவான்கள்

அதோடு இந்த சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி எவ்வாறு ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளப் போகிறது? அடுத்தடுத்து வரும் போட்டிகளுக்கு எவ்வாறு வீரர்களை பிளேயிங் லெவனில் தேர்வு செய்யலாம்? என்பது குறித்த எல்லா முடிவுகளும் இன்றைய போட்டியின் முடிவிற்கு பின்னர் தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement