உத்தப்பா மற்றும் மொயின் அலி வருகையால் வாய்ப்பை இழக்க உள்ள 2 இளம்வீரர்கள் -விவரம் இதோ

CSK-1
- Advertisement -

சென்ற ஆண்டு ப்ளே ஆப்ஸ் கூட செல்லாமல் சரியாக விளையாடாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு தனது பழைய ஆட்டத்தைக் காண்பிக்கும் வகையில் இந்த வருட ஐபிஎல் தொடருக்கு தயாராகி வருகிறது. கடந்த கடந்த மாதம் நடந்து முடிந்த ஏலத்தில் கிருஷ்ணப்ப கவுதம் மொயீன் அலி , புஜாரா , ஹரி நிஷாந்த் , ஹரிஷங்கர் ரெட்டி மற்றும் பகத் வர்மா ஆகிய வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது.இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எந்தெந்த வீரர்களை எந்த இடத்தில் வைக்கப் போகிறது என்கிற தகவல் கசிந்துள்ளது.

ஏற்கனவே அணியில் உள்ள ஜெகதீசன் மற்றும் ருத்ராட்சை தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பான ஆட்டத்தை இதுவரை வெளிப்படுத்தி வந்திருந்தனர். இந்த ஆண்டு இவர்களுக்கு நிச்சயம் அதிக வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்த்த வேளையில், டிரேடிங் முறையில் வாங்கப்பட்ட உத்தப்பா மற்றும் மொயின் அலியால் இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

உத்தப்பா தற்பொழுது உள்ளூர் ஆட்டங்களில் சிறப்பாக ஆடி வருகிறார். எனவே அவரை ஓபனிங் இறக்கிவைக்க அதிக வாய்ப்புள்ளது அதன்படி ருத்ராஜூக்கு வாய்ப்பு கிடைக்க போவதில்லை. மேலும் மிடில் ஓவர்களில் மொயின் அலியை களம் இறங்க வைக்க போவதால் ஜெகதீசனுக்கும் வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை.

Ruturaj

சீனியர் வீரர்கள் வருகையால் இளம் வீரர்களான இவர்களுக்கு வாய்ப்பு சரிவர கிடைக்காது என்றே பல கிரிக்கெட் வல்லுனர்களும் ரசிகர்களும் கணித்து உள்ளனர். இவர்களுக்கே இந்த நிலை என்றால் இந்த வருடம் வாங்கப்பட்ட மேலும் மூன்று இளம் வீரர்களுக்கு எந்த வகையில் வாய்ப்பு வழங்கப்படும் என்பதும் மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

சென்ற வருடமே இளம் வீரர்களுக்கு சரியான வாய்ப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அளிக்கத் தவறியது என்ற மிகப் பெரிய குற்றச்சாட்டு பெரிய அளவில் எடுத்து வைக்கப்பட்டது. அதே குற்றச்சாட்டை இந்த ஆண்டும் எடுத்துப் வைப்பார்கள் என்கிற அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முடிந்தவரை இளம் வீரர்களுக்கு வாய்ப்பு நிச்சயம் கொடுக்கும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் சிலர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement