
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை சூப்பர் ஓவரில் வீழ்த்தி அமெரிக்க கிரிக்கெட் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஜூன் 6ஆம் தேதி டாலஸ் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 44, சடாப் கான் 40 ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் 159/7 ரன்கள் எடுத்தது.
அதைத் துரத்திய அமெரிக்காவும் சரியாக 20 ஓவரில் 159/3 ரன்கள் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் மோனக் பட்டேல் 50, ஆரோன் ஜோன்ஸ் 36*, ஆண்ட்ரீஸ் கௌஸ் 35, நிதிஷ் குமார் 14* ரன்கள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து முகமத் அமீர் வீசிய சூப்பர் ஓவரில் அமெரிக்கா 18/1 ரன்கள் எடுத்தது.
சேதப்படுத்திய பாகிஸ்தான்:
அந்த அணிக்கு ஆரோன் ஜோன்ஸ் 11 ரன்கள் எடுத்த நிலையில் முகமத் அமீர் 7 ஒய்ட் ரன்களை வாரி வழங்கினார். அதைத்தொடர்ந்து 19 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு எதிராக 13 ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட் எடுத்த நேத்ராவல்கர் அமெரிக்காவை வெற்றி பெற வைத்தார். அதனால் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று அமெரிக்கா சாதனை படைத்தது.
முன்னதாக இந்த போட்டியில் 14 ஓவரில் அமெரிக்கா 111/3 ரன்கள் எடுத்ததால் கடைசி 6 ஓவரில் 49 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அதனால் அமெரிக்கா எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசிக்கட்ட ஓவர்களில் திடீரென பாகிஸ்தான் துல்லியமாக பந்து வீசியது. ஆனாலும் ஹரிஷ் ரவூப் வீசிய கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட போது 14 ரன்கள் அடித்த அமெரிக்கா போட்டியை சமன் செய்து கடைசியில் வெற்றியும் பெற்றது.
இந்நிலையில் இந்தப் போட்டியில் அமெரிக்கா பேட்டிங் செய்த இன்னிங்ஸில் கொண்டுவரப்பட்ட புதிய பந்தை ஹரிஷ் ரவூப் தன்னுடைய நகத்தால் சேதப்படுத்தியதாக ரஸ்டி தேரன் விமர்சித்துள்ளார். தென்னாப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா ஆகிய 2 நாடுகளுக்காகவும் விளையாடிய பெருமையைக் கொண்ட இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.
இதையும் படிங்க: சூப்பர் ஓவரில் அவரை அனுப்பாமா தப்பு செஞ்ச பாகிஸ்தான்.. இப்போ இந்தியாவிடம் மாட்டிக்கிட்டாங்க.. யுவராஜ்
“புதிதாக மாற்றப்பட்ட இந்த பந்தில் பாகிஸ்தான் சொறிந்து விடவில்லை என்று நாம் பாசாங்கு செய்யப் போகிறோமா ஐசிசி? 2 ஓவர்களுக்கு முன்பு மாற்றப்பட்ட பந்தை திருப்பி அனுப்ப அனுமதிக்கலாமா? அந்தப் புதிய பந்தின் உச்சியில் ஹரிஷ் ரவூப் தனது கட்டைவிரல் நகத்தை வைத்து ஓட்டுவதை நீங்கள் உண்மையில் பார்க்கலாம்” என்று கூறியுள்ளார்.