ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணிக்காக எனது சொதப்பலான ஆட்டத்திற்கு இதுவே காரணம் – மனம்திறந்த ரசல்

Russell
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த 13வது ஐபிஎல் சீசனில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கொல்கத்தா அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரசல் தனது பேட்டிங்கில் மிகமோசமான வெளிப்பாட்டை காட்டியிருந்தார். கொல்கத்தா அணியின் மிகவும் பலம் வாய்ந்த வீரராக பார்க்கப்படும் ரசல் இந்த தொடர் முழுவதும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அந்த அணிக்கு அதிர்ச்சி அளித்தது. அதற்கு முன்னர் 2019ஆம் ஆண்டு பின்வரிசையில் இறங்கினாலும் 56 ரன்கள் ஆவரேஜ் வைத்து அதிரடியாக விளையாடி இருந்தார்.

Russell

நடப்பு 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 10 போட்டிகளில் 117 ரன்கள் மட்டுமே குவித்தார். அதுமட்டுமின்றி இடையில் நான்கு போட்டிகளில் அவருக்கு சிறப்பாக விளையாடவில்லை என்று வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஒரு வருடத்திற்கு முன்னர் தவிர்க்க முடியாத வீரராக வலம் வந்த ரசல் இந்த தொடரில் 4 போட்டிகளை தவிர விடவும் அவரது மோசமான பேட்டிங்கே காரணமாக அமைந்தது.

- Advertisement -

இருப்பினும் அவர் இதிலிருந்து மீண்டு வருவதற்கான வேலைகளை செய்து வருகிறார். அதன்படி அவர் ஐபிஎல் தொடரின்போது கேகேஆர் அணிக்காக தனது மோசமான பேட்டிங்கிற்கு என்ன காரணம் என்ன என்பது குறித்து தற்போது தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் ஐபிஎல் தொடரின்போது என்னுடைய ஸ்டாண்ட்ஸ் (அதாவது நிற்கும் நிலை) அதை மாற்றினேன். அதுமட்டுமின்றி என்னுடைய டெக்னிக்கையும் மாற்றினேன்.

Russell

அதோடு நான் எந்த நேரத்தில் அடிக்க வேண்டும் என்ற திட்டத்தையும் மாற்றினேன். இது எல்லாம் சரியாக செல்லும் என்று நான் எதிர்பார்த்த நிலையில் நான் நினைத்து போல எதுவுமே சரியாக செல்லவில்லை. அதனாலேயே இந்த ஐபிஎல்லில் என்னால் சிறப்பாக விளையாட முடியவில்லை. ஐபிஎல் முழுவதுமே என் கட்டுப்பாட்டில் எதுவுமே இல்லை. அதனால் என் மீது அழுத்தத்தை உணர்ந்தேன். அதனால் இம்முறை ஐபிஎல் தொடரின்போது நான் மிகவும் இறுக்கமாக உணர்ந்தேன்.

Russell

வெகுவிரைவில் இதிலிருந்து மீண்டு வருவேன் என ரசூல் கூறினார். மேலும் பேசிய அவர் : லாக்டவுன் விதிமுறைகள் மூலம் ஒரு அறையில் இருப்பது சிறையில் இருப்பது போன்று இருக்கிறது. அதிலிருந்து எப்போது வெளி வருவோம் என்று வேண்டிக்கொண்டே இருக்கிறேன் என்று ரசல் கூறினார்கள். இப்போது ஸ்ரீலங்கா பிரீமியர் லீக்கில் கொழும்பு கிங்ஸ் அணிக்காக அவர் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement