Andre Russell : நான் பேட்டிங் செய்யும்போது இதனை கவனிப்பது கிடையாது – ரசல் பேட்டி

நேற்றைய கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ரசல் இந்த போட்டி குறித்து பேட்டி ஒன்றினை அளித்தார்.

Russell
- Advertisement -

பெரிய இலக்கை நிர்ணயித்த பெங்களூரு :

ஐ.பி. எல் தொடரின் 17 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு மைதானத்தில் நடைபெற்றது, இந்த போட்டியில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்று பந்துவீச்சினை தேர்வு செய்தது கொல்கத்தா. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 84 ரன்களை அடித்தார்.

Kohli

- Advertisement -

எளிதாக சேசிங் செய்த கொல்கத்தா :

பிறகு 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி 19.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 206 ற்றங்களை அடித்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் சார்பாக க்றிஸ் லின் 43 ரன்களும், ரஸ்ஸல் 48 ரன்களும் அடித்தனர். இதன்மூலம் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Kohli 1

மிரட்டிய ரசல் :

நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது ரசலின் அதிரடியான பேட்டிங்கே காரணம். மொத்தம் 13 பந்தில் 48 ரன்களை அடித்தார். அதில் 7 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியும் அடங்கும்.

Lynn

போட்டி குறித்து பேசிய ரசல் :

இந்த போட்டியில் நான் களமிறங்கிய போதே என்னால் எவ்வளவு சிக்ஸர்களை அடிக்க முடியுமோ அவ்வளவு சிக்ஸர்களை அடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் தான் 7 சிக்ஸர்களை அடிக்க முடிந்தது.

Russell
மேலும், நான் களத்தில் விளையாடி கொண்டிருக்கும்போது நான் ஸ்கோர் போர்டை எப்போதும் பார்ப்பதில்லை. ரன்களை விரைவாக குவிக்கிறேனா ? என்பதை மட்டும் தான் நான் பார்க்கிறேன். மேலும், கொல்கத்தா அணிக்காக நான் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று கூறினார்.
kohli

Advertisement