மரண அடி அடிக்கும் ரசல் மரண அடி வாங்கி ஸ்டெச்சரில் படுத்து செல்லும் காட்சி – வீடியோ வடிவில் இதோ

Russell

வெஸ்ட்இண்டீஸ் நாட்டில் தற்போது கரீபியன் பிரீமியர் போட்டிகளின் லீக் சுற்று தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நேற்றைய போட்டியில் ஜமைக்கா அணி மற்றும் செயின்ட் லூசியா அணிகள் மோதின.

இந்த போட்டியில் ஜமைக்கா அணிக்காக ஆடிய ரசல் 14-வது ஓவரின் போது எதிரணி பந்துவீச்சாளர் வீசிய ஒரு பவுன்சரை அடிக்க முற்பட்டார். ஆனால் பந்தினைச் சரியாக கணிக்க முடியாமல் நேராக தனது ஹெல்மெட்டின் வலது பகுதியில் காதின் அருகே அடி வாங்கினார்.

பந்து அடித்த வேகத்தில் ரசல் கீழே சுருண்டு விழுந்தார். பின்னர் மைதானத்திற்குள் வந்த மருத்துவக் குழு ஸ்ட்ரெச்சரில் ரசலை தூக்கி சென்றனர். மேலும் அதன் பிறகு பரிசோதனை செய்யப்பட்டு ரசலுக்கு பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் அவருக்கு தற்போது ஓய்வு அவசியம் என்றும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.