ஆட்டமிழந்து வெளியேறியும் வீரர்கள் அறைக்கு செல்லாமல் படியில் கோபமாக உட்கார்திருந்த ரசல் – காரணம் இதுதான்

Russell
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் 15வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையில் நடந்தது. இப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 220 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய கொல்கத்தா அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்கள் எடுத்தது. இதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையிடம் தோல்வியை தழுவியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

- Advertisement -

இப்போட்டியில் அந்த அணியின் கடைசி கட்ட அதிரடி ஆட்டக்காரரான ஆண்ட்ரு ரசல் பவர் பிளே முடிவதற்குள்ளாகவே களத்திற்கு வந்து விட்டார். அந்த அளவிற்கு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் கொல்கத்தா அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள். ரஸல் களத்திற்கு வரும்போது அந்த அணியானது 5.2 ஓவர்களில் 31 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக் கொண்டிருந்தது.

களத்தில் ஆடிக்கொண்டிருந்த தினேஷ் கார்த்திக்குடன் இணைந்த ஆண்ட்ரு ரஸல் விக்கெட் விழுந்ததைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் விளையாடிய விதத்தை பார்த்தபோது கொல்கத்தா அணி நிச்சயமாக வெற்றி பெற்று விடும் என்றே தோன்றியது. அப்படி ஒரு தன்னம்பிக்கையான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் ஆண்ட்ரு ரஸல். ஜடேஜா வீசிய 11வது ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார் ஆண்ட்ரு ரஸல்.

russell

ஆனால் அதற்கடுத்த ஓவரில் சாம் கரன் வீசிய பந்தில் நகர்ந்து ஆடிய ரஸல், பந்தானது லெக் சைடில் வைடு செல்லும் என்று விட்டுவிட்டார். ஆனால் பந்தானது குட் லெந்தில் பிட்சாகி ஸ்டம்பை பதம் பார்த்தது. ரஸல் அவுட்டான போது கொல்கத்தா அணியின் ஸ்கோர் 11.2 ஓவர்களில் 112 ரன்கள். 6வது ஓவரிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய கொல்கத்தா அணியை தனது அதிரடி பேட்டிங் மூலம் மீட்டெடுத்த ரஸல் அணியை வெற்றிபெற வைக்காமல் தன்னுடைய தவறான கணிப்பால் அவுட்டானதால் மிகவும் விரக்தி அடைந்து பிட்ச்சைவிட்டு வெளியேறினார்.

cummins

அவுட்டாகி வுளியேறிய பின்னரும் மிகுந்த கோபத்துடன் அங்கிருந்த படிக்கட்டில் அமர்ந்துகொண்டு மேட்ச்சை பார்த்துக் கொண்டிருந்தார் அண்ட்ரு ரஸல். இந்தப் போட்டியில் ரஸல் 22 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். இதில் 6 சிக்ஸர்கள் அவர் அடித்திருந்தார்.

Advertisement