இந்தியாவிற்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டியில் இருந்து விலகிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் – விவரம் இதோ

WI
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே இன்று முதலாவது டி20 போட்டி இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. முதல் இரு போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

- Advertisement -

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியின் தோல்விக்கு பிறகு இந்திய அணி பங்கேற்கும் முதல் போட்டி இது என்பதால் இந்த போட்டியில் சுவாரசியம் அதிகமாக உள்ளது. மேலும் கேப்டன் கோலிக்கும், ரோஹித் சர்மாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை குறித்த நிலவரம் புரியாமல் இருக்கும் இந்த நேரத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளதால் இன்றைய போட்டி சுவாரசியமாக அமைய வாய்ப்புள்ளது.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி வீரர்களான பொல்லார்ட், கெயில் மற்றும் சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரேன் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். இதற்கிடையே அந்த அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரசல் காயம் காரணமாக இந்தியாவுடனான முதல் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பதிலாக ஜேசன் முகமது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். குறுகிய ஓவர் போட்டியில் இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகள் சிறப்பாக விளையாடும் என்பதால் இந்த போட்டி இரு அணி ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும்.

Advertisement