நீங்க சொன்னது கரெக்ட் தான். ஆனால் கிரிக்கெட்டில் என்ன நடக்கும்னு எங்களுக்கு தான் தெரியும் – ரசல் பதிலடி

Russell

2021 ஐபிஎல் தொடரின் 5வது லீக் மேட்சில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 152 ரன்களை எடுத்தது 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையிடம் தோல்வி அடைந்தது.
இதில் கடைசி 18 பந்துகளில் 22 ரன்கள் அடிக்க வேண்டும் என்று சூழ்நிலையில் தினேஷ் கார்த்திக்கும் , ஆண்ட்ரு ரஸலும் களத்தில் இருந்தனர்.

karthik

எளிதாக வெற்றி பெற வேண்டிய இப் போட்டியில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்ததால், அணி மீது அதிருப்தி அடைந்த அந்த அணியின் ஓனர் ஷாருக்கான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கடுமையாக விமர்சித்துள்ளார். எளிதாக வெற்றி பெற வேண்டிய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்களின் இந்த அலட்சிய ஆட்டத்தால் ஏற்பட்ட தோல்வி கொல்கத்தா அணியின் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று தான், எனவே அணியின் சார்பாக நான் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று வருத்தமாக தெரிவித்தார்.

ஷாருக்கானின் இந்த கருத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஆண்ட்ரு ரஸல் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, ஷாருக்கான் கருத்தை நான் ஆதரிக்கிறேன். ஆனால் இது இந்த ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டிதான், இன்னும் விளையாட வேண்டிய நிறைய போட்டிகள் இருக்கின்றன. அதில் நாங்கள் முழு திறனையும் வெளிப் படுத்துவோம்.

chahar

அணியின் ஒவ்வொரு வீரரும் மற்ற வீரர்களை மதித்து அணி வெற்றிபெற கடுமையாக உழைக்கின்றனர். ஒரு கிரிக்கெட் மேட்ச் என்பது அதன் இறுதி வரை வெற்றி யார் பக்கம் செல்லும் என்பதை கணிக்கவே முடியாத ஒன்றாகும். நான் பல போட்டிகளில் விளையாடி உள்ளேன் அந்த போட்டிகள் எல்லாம் முடிவுகள் இப்படித் தான் வரும் என்று முன்கூட்டியே கணிக்க இயலாது என்பதை நான் உணர்வேன். ஒரு போட்டியில் நாம் வெற்றி பெறுகிறோமா அல்லது தோல்வி பெருகிறோமோ என்பது விஷயமல்ல அப்போட்டியில் இருந்து நாம் எதைப் பாடமாக கற்றுக் கொண்டோம் என்பது தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு ஷாருக்கானுக்கு பதில் தந்துள்ளார் ரஸல்.

- Advertisement -

Russell

கடந்த சீசனிலேயே ரசலின் ஆட்டத்தினால் ஷாருக்கான் அதிருப்தி அடைந்திருந்தார். இந்தப் போட்டியிலும் கடைசிவரை அவர் களத்தில் இருந்தும் அணியை வெற்றி பெறவைக்காததால் அவர்மேல் மேலும் அதிருப்தியில் இருக்கிறார் ஷாருக்கான்.