104 மீட்டர் ராட்சஸ சிக்ஸரை அடித்த அடித்த ரஸ்ஸல் – வீடியோ

Russell
- Advertisement -

நேற்று இரவு 8 மணிக்கு நடந்த போட்டியில் கொல்கத்தா அணியும், டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியில் துவக்கத்தில் விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி ரன்களை குவிக்க தடுமாறியது. பிறகு களமிறங்கிய ரஸல் பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கினார். அதிலும் குறிப்பாக அவர் அடித்த ஒரு சிக்ஸர் மைதானத்தின் மேல் அடுக்குக்கு சென்றது. இந்த சிக்சரின் தூரம் 104 மீட்டராகும். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற 10 ஆவது போட்டியில் கொல்கத்தா அணியும், டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச டெல்லி முடிவு செய்தது. அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை அடித்தது. கொல்கத்தா அணி சார்பாக 28 பந்துகளில் 62 ரன்களை குவித்து கொல்கத்தா அணி பெரிய ஸ்கோரை அடிக்க உதவினார்.

பிறகு ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் சரியாக 185 ரன்களை குவித்தது. டெல்லி அணி சார்பில் துவக்க வீரர் பிரிதிவி ஷா சிறப்பாக விளையாடி 55 பந்துகளில் 99 ரன்களை குவித்தார். இதனால் போட்டி டை ஆனது. பிறகு வீசப்பட்ட சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய டெல்லி அணி 10 ரன்களை குவித்தது. பிறகு கொல்கத்தா அணியால் 7 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

Advertisement