கெயில் இல்லாத நிலையில் மீண்டும் ஒரு அதிரடி வீரரை நீக்கிய வெஸ்ட் இண்டீஸ் – விவரம் இதோ

WI

இந்திய அணி தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. பங்களாதேஷ் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதலிடத்தில் இருந்து வருகிறது.

Wi-3

இந்த டெஸ்ட் தொடருக்கு அடுத்து தற்போது மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த இரு தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஏற்கனவே கெயில் தானாக முன்வந்து கிரிக்கெட் விளையாடவில்லை என்று அறிவித்தார். பொல்லார்ட் இந்திய அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மற்றுமொரு அதிரடி வீரரான ஆன்ட்ரே ரசல் இந்த தொடரில் இடம் பெறவில்லை என்று வெஸ்ட் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

russell 2

சமீபத்தில் காயமடைந்த ரசல் தற்போது சிகிச்சை பெற்று வருவதால் அவர் அணியில் இடம்பெறவில்லை என்று கூறப்படுகின்றது. இருப்பினும் ரசல் முழுவதும் குணமடைந்து விளையாட முழுத்தகுதியுடன் இருந்தும் அவரை அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் நிராகரித்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே கெயில் இப்போது ரசல் என அடுத்தடுத்து அதிரடி வீரர்கள் வெளியேறியதால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு தற்போது மேலும் எளிமையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -