என்னை மதிக்காத இந்த அணியில் நான் இனி விளையாடமாட்டேன் – ரசல் அதிரடி

Russell
- Advertisement -

இந்தியாவில் 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரை போலவே ஆஸ்திரேலியாவில், பாகிஸ்தானில், வெஸ்டிண்டிஸ்சில், வங்கதேசத்தில், தென்னாப்பிரிக்காவில் என அனைத்து நாடுகளிலும் அவர்களின் தனித்த டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர்களுக்கான வரவேற்பு இந்தியாவினை போன்றே உலகஅளவிலும் கிடைப்பதினால் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் நடைபெற்று வருகிறது.

cpl

- Advertisement -

இந்த அனைத்து லீக் தொடர்களிலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு டிமாண்ட் அதிகம். அதுவும் பொல்லார்ட், ரஸல், ப்ராவோ போன்ற வீரர்களுக்கு அங்கு பெரும் வரவேற்பு இருக்கும். இதில் ஆன்ட்ரு ரஸல் இந்தியாவில் கொல்கத்தா அணிக்கு ஆடுவதை போலவே வெஸ்ட் இண்டீஸ்சில் நடைபெறும் கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் ஜமைக்கா அணிக்காக ஆடி வருகிறார்.

மேலும் அவர் அந்த அணிக்கு ஒரு சில சீசனில் கேப்டனாக இருந்துள்ளார். இந்நிலையில் தான் ஆடியதிலேயே மிகவும் மோசமான நிர்வாகம் கொண்ட அணி எது என்று குறிப்பிட்டுள்ளார். தனது சொந்த நாட்டில் நடத்தப்படும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் உள்ள ஜமைக்கா அணி நிர்வாகம் சற்று மோசமானதாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்…

Russell

நான் ஜமைக்கா அணிக்காக மிகச் சிறந்த அளவில் விளையாடி வருகிறேன். அந்த அணிக்கு கேப்டனாக இருந்துள்ளேன். ஆனால் அந்த அணி என்னை நடத்தும் விதமும் எனது கருத்துக்களைக் கேட்கும் முறையும் முற்றிலும் சரி இல்லை. ஏதோ அறிமுகப் போட்டியில் ஆடும் வீரரைப் போல நடத்துகிறார்கள்.

- Advertisement -

நமது கருத்துக்கு மதிப்பே இல்லை. முதல் தர போட்டியில் ஆடும் வீரர்களுக்கு கூட அங்கு மதிப்பிருக்கிறது. அணியில் எந்த வீரர்களை தக்க வைக்கிறீர்கள்,? யாரை விடுகிறீர்கள்? என்று கேட்டால் கூட அதற்கும் பதில் இல்லை. நான் அந்த அணிக்கு ஆடுவது இதுவே கடைசி முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன் இவ்வாறு கூறியுள்ளார் ஆன்ட்ரு ரஸல்.

Russell 1

அவரின் இந்த குற்றச்சாட்டுக்கு அந்த அணி நிர்வாகம் சார்பில் எந்த ஒரு பதிலும் வெளியாகவில்லை. கூறிய கருத்து உண்மைதானோ என்று தோன்றுகிறது. அதுமட்டுமின்றி சொந்த நாட்டில் நடைபெறும் டி20 லீக் போட்டிகள் குறித்த குற்றச்சாட்டை முன்வைக்கும் ரசல் இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் தனக்கான மதிப்பு அதிகம் இருப்பதாகவும் கொல்கத்தா ரசிகர்கள் தன்னை கொண்டாடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Russell

அதுமட்டுமின்றி 32 வயதாகும் ரசல் தான் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும்வரை கொல்கத்தா அணிக்காக மட்டுமே விளையாடப்போவதாகவும் வெளிப்படையாக சில தினங்களுக்கு முன் பேட்டி அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisement