WI vs PAK : சத்தமில்லாமல் தன் காரியத்தை செய்து முடித்த ரசல் – விவரம் இதோ

உலககோப்பை தொடரின் இரண்டாவது போட்டியான நேற்று சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் நேற்று ட்ரெண்ட் பிரிட்ஜ்

Russell-1
- Advertisement -

உலககோப்பை தொடரின் இரண்டாவது போட்டியான நேற்று சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் நேற்று ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் மோதின.

pak

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சினை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 21.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களை மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக பக்கர் சமான் 22 ரன்களும், பாபர் அசாம் 22 ரன்களையும் அடித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் தாமஸ் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பிறகு 106 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 13.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக கெயில் 50 ரன்களை அடித்தார்.

பவுலிங் செய்ய கடினமான மைதானத்தில் நேற்று பந்துவீச பாகிஸ்தான் வீரர்கள் கஷ்டப்பட்டனர். மேலும், ரன்களை வாரிக்குடுத்து விரைவில் தோல்வியும் அடைந்தனர். பாகிஸ்தான் அணியில் வஹாப் ரியாஸ், அமீர் போன்ற திறமையான பந்துவீச்சாளர்கள் இருந்து அவர்கள் பந்துவீச சிரமப்பட்டனர். அமீர் மட்டும் 3 விக்கெட்டை எடுத்தார். வேறு எந்த பாகிஸ்தான் வீரராலும் சரியாக பந்துவீச முடியவில்லை.

ஆனால், இதே மைதானத்தில் முதலில் பந்துவீசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டரான ரசல் 3 ஓவர்கள் பந்துவீசி 1 மெய்டன் மற்றும் 4 ரன்களை மட்டும் கொடுத்து பக்கர் ஜமான் மற்றும் ஹாரிஸ் சோகைல் ஆகிய 2 முக்கிய விக்கெட்டுகளை சத்தமில்லால் வீழ்த்தி அசத்தினார். பேட்டிங் அல்லது பவுலிங் என்று ஏதாவது ஒன்றில் அவர் சிறப்பாக செயல்படுவதால் இந்த தொடரில் பெரிய அளவில் பிரகாசிப்பார் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement