Andre Russell : ஐ.பி.எல் போட்டிகளால் ரசலுக்கு அடித்த ஜேக்பாட் – விவரம் இதோ

உலகக்கோப்பை தொடர் வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெற

Russell
- Advertisement -

உலகக்கோப்பை தொடர் வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Worldcup

இந்நிலையில் இந்த தொடருக்கான உத்தேச அணியை அனைத்து அணிகளும் ஏப்ரல் 23 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி அறிவித்தது. அதன்படி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. இந்த வீரர்களின் பட்டியலில் அதிரடி ஆட்டக்காரரான ஆண்ட்ரே ரசல் சேர்க்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

இந்த வருட ஐ.பி.எல் போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக விளையாடிவரும் ரசல் தொடர்ச்சியாக சிறப்பான அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார். அதிரடியில் மிரட்டிவரும் இவரை வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக்கோப்பை அணியில் சேர்த்துள்ளது. மேலும், கெயில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பொல்லார்ட், சுனில் நரேன் ஆகியோர் அணியில் இடம் பிடிக்கவில்லை.

Russell

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக உலகக்கோப்பை தொடரில் ஜேசன் ஹோல்டர் செயல்பட உள்ளார். கெயில் தனது 5 ஆவது உலகக்கோப்பை தொடரில் ஆட இருப்பது குறிப்பிடதக்கது.

Advertisement