- Advertisement -
உலக கிரிக்கெட்

விஜய்யின் பிகில் படத்தினை தியேட்டரில் பார்க்க 2 டிக்கெட் கேட்ட கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா ? – விவரம் இதோ

இயக்குனர் அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் மற்றும் நயன்தாரா, யோகி பாபு, ஆனந்த் ராஜ் மற்றும் கதிர் என பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருக்கும் பிகில் இந்த படம் தீபாவளி அன்று திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ரசல் அர்னால்டு இந்த திரைப்படத்தின் டிரைலரை கண்டு ரசித்ததாகவும், ராயப்பன்கேரக்டர் மாஸாக இருப்பதாகவும் மேலும் இந்த திரைப்படத்தை காண எனக்கு இரண்டு டிக்கெட்டுகள் கிடைக்குமா நண்பா என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இதனை கண்ட கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் இந்த டிவீட்டிற்கு ரிட்வீட் செய்து வருகின்றர் மேலும் சென்னைக்கு வந்து இந்த படத்தை காணும்படியும் கமெண்டுகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by