தென்னைப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது – அணி நிர்வாகம் அறிவிப்பு

rsa

கடந்த மார்ச் மாதம் முதல் உலகெங்கிலும் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய கொடிய தாக்கம் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் இருந்தன. அதன்பிறகு தற்போது ஆறு மாதங்கள் கழித்து மெல்ல மெல்ல கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பித்திருக்கின்றன. மிகப்பெரிய சிக்கல்களுக்கு இடையே நடைபெறுமா ? என்று சந்தேகிக்கப்பட்ட ஐபிஎல் தொடரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

இதனால் அனைத்து நாடுகளும் தற்போது மெல்ல மெல்ல கிரிக்கெட் போட்டிகளை நடத்த துவங்கியுள்ளனர். அந்த வகையில் தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக தென்னாப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி வரும் 27ம் தேதி கேப்டவுனில் துவங்கவிருக்கிறது. இதற்கான இங்கிலாந்து வீரர்கள் ஏற்கனவே தென்னாபிரிக்கா சென்று அடைந்து தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு தற்போது தயாராகி உள்ளனர். இந்நிலையில் திட்டமிட்டபடி இத்தொடர் நடைபெறுவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

RSA

ஆம் தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், நிர்வாகிகள், உதவியாளர்கள் என 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரரான ஒருவருக்கு பாதிப்பு இருந்தது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இருவரும் உடனடியாக தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

- Advertisement -

Rsa-3

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியை சேர்ந்த மற்றொரு வீரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் பெயர் விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால் நேற்று நடக்கவிருந்த பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து வீரர்களுக்கு பரிசோதனையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்ற முடிவு வெளியானதால் அவர்கள் பயிற்சி போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.