பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை கேன்சல் செய்த தென்னாபிரிக்கா. காரணம் இதுதான் – விவரம் இதோ

Eshan-PCB

பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வரும் கிரிக்கெட் தொடர்களில் பயங்கரவாதம் காரணமாக எந்த ஒரு அணியும் பாகிஸ்தான் சென்று விளையாடாமல் இருந்தது. மேலும் இந்திய அணியும் பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் தொடரில் பங்கேற்று கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் முடிந்து விட்டது.

Pak-1

ஆனால் பாகிஸ்தான் அணி ஒவ்வொரு நாடுகளாக தங்கள் நாட்டிற்கு வந்து விளையாடும்படி அழைப்பினை விடுத்துள்ளது. அதன்படி இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் போன்றவை பாகிஸ்தான் நாட்டிற்கு சென்று கிரிக்கெட் விளையாடினர். இந்நிலையில் தற்போது மீண்டும் சர்வதேச போட்டிகளில் பாகிஸ்தான் அதிக அளவு நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தீவிரம் காட்டி வருகிறது.

இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணிக்கு தற்போது பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது. மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்க அணி பாகிஸ்தான் வந்து விளையாடும் படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டது. ஆனால் தற்போது பாகிஸ்தானின் இந்த அழைப்பை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் நிராகரித்துள்ளது.

rsa

அதன் காரணம் யாதெனில் தங்களது தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருவதால் மார்ச் மாதம் அவர்களால் வர இயலாது என்றும் அவர்களுக்கு அதிக போட்டி சுமை இருப்பதால் ஓய்வு தேவை என்ற காரணத்தினாலேயே தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.