தென் ஆப்பிரிக்காவுக்கு ஏன் கோலி ஃபாலோ ஆன் கொடுத்தார் தெரியுமா – ஆச்சரியப்பட வைக்கும் தகவல் இதோ

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ய அடுத்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 275 ரன்களுக்கு முதல் இன்னிங்சை இழந்தது.

Umesh

- Advertisement -

மூன்றாம்நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணியின் அணியின் முத்த இன்னிங்ஸ் முடிவுக்குவர தென்னாப்பிரிக்க அணி 326 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது. இதனையடுத்து இந்திய அணி நான்காம் நாளான இன்று ஃபாலோ ஆன் கொடுக்குமா ? கொடுக்காமல் இந்திய அணி மீண்டும் பேட்டிங் செய்யுமா ? என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் நேற்று முழுவதும் ஃபாலோ ஆன் குறித்து ஆலோசனை செய்த கோலி இன்று காலை தென்னாப்பிரிக்க அணியை மீண்டும் பேட்டிங் செய்ய அழைத்தார். அதாவது தென்னாப்பிரிக்க அணிக்கு ஃபாலோ ஆன் கொடுத்தார். வழக்கமாக ஃபாலோ ஆன் கொடுக்காமல் பேட்டிங்கை தொடர விரும்பும் கோலி தற்போது ஏன் ஃபாலோ ஆன் கொடுத்தார் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

ashwin 1

அதன்படி இன்று காலை தென்னாப்பிரிக்க அணியை பேட்டிங் அழைத்து கோலி ஃபாலோ ஆன் கொடுத்தார். இதன்மூலம் கடந்த 11 ஆண்டுகளுக்கு பிறகு தென்ஆப்பிரிக்கா அணி முதன் முறையாக ஃபாலோ ஆன் பெற்றது. கோலி ஃபாலோ ஆன் கொடுக்க முக்கிய காரணம் இந்திய பந்துவீச்சாளர்கள் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கைதான். கடந்த இரண்டு ஆண்டுகளாக வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து பந்துவீச்சாளர்கள் என அனைவரும் சிறப்பாக பந்து வீசிவருகிறார்கள்.

ஷமி பழைய மற்றும் புதுப்பந்து என இரண்டிலும் சிறப்பாக வீசுவார். உமேஷ் யாதவ் அதிவேகத்தில் வீசக்கூடியவர், இஷாந்த் நல்ல அனுபவம் உள்ளவர்கள் மேலும் அஷ்வின் மற்றும் ஜடேஜா சுழற்பந்தில் அசத்தி வருவதால் போட்டியை இன்றே முடிக்கும் திட்டத்துடன் கோலி ஃபாலோ ஆன் கொடுத்துள்ளதுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement