ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. அதில் மார்ச் ஒன்றாம் தேதி பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் நடைபெற்ற 11வது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் வகிக்கும் தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. அதில் ஏற்கனவே அடுத்தடுத்த தோல்விகளால் வெளியேறிய இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கி அந்த அணி முந்தைய போட்டிகளை விட மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 38.2 ஓவரில் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பில் சால்ட் 8, பென் டக்கெட் 24, ஜேமி ஸ்மித் 0, ஹரி ப்ரூக் 19, கேப்டன் பட்லர் 21, லிவிங்ஸ்டன் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதிகபட்சமாக ஜோ ரூட் 37 ரன்கள் எடுத்த நிலையில் தென்னாபிரிக்காவுக்கு அதிகபட்சமாக வியான் முல்தர், மார்க்கோ யான்சன் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
செமி ஃபைனலில் தெ.ஆ:
அடுத்ததாக விளையாடிய தென்னாப்பிரிக்காவுக்கு ட்ரிஷன் ஸ்டப்ஸை டக் அவுட்டாக்கிய ஜோப்ரா ஆர்ச்சர் மறுபுறம் தடுமாறிய ரியான் ரிகல்டனை 27 ரன்களில் போல்ட்டாக்கினார். இருப்பினும் அடுத்ததாக ஜோடி சேர்ந்த வேன் டெர் டுஷன் – ஹென்றிச் க்ளாஸென் ஆகியோர் சிறப்பாக விளையாடி தென்னாப்பிரிக்காவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தனர். அதில் தமது ஸ்டைலில் அதிரடி காட்டிய கிளாஸின் 11 பவுண்டரியுடன் 64 ரன்களில் அடில் ரசித் சுழலில் சிக்கினார்.
ஆனால் மறுபுறம் தொடர்ந்து நிதானமாக விளையாடிய டுஷன் 72* (87) ரன்கள் குவித்தார். இறுதியில் டேவிட் மில்லர் சிஸ்கருடன் 7* (2) ரன்கள் அடித்ததால் 29.1 ஓவரில் 181-3 ரன்களை எடுத்த தென்னாப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. அதனால் 3 போட்டிகளில் 5 புள்ளிகளை பெற்ற தென்னாப்பிரிக்கா குரூப் பி பிரிவில் முதலிடம் பிடித்து தென்னாப்பிரிக்காவுக்கு தகுதி பெற்றது.
டபுள் ஒய்ட்வாஷ்:
ஏற்கனவே தகுதி பெற்ற ஆஸ்திரேலியா 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அதன் காரணமாக ஆப்கானிஸ்தான் வெளியேறியது. மறுபுறம் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து விளையாடிய 3 போட்டிகளிலும் 3 தோல்விகளை சந்தித்தது. 3 – 0 (3) என்ற கணக்கில் தோற்றாலும் கவலையில்லை சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் இந்தியாவை வீழ்த்துவோம் திறமை இருப்பதாக இம்மாத துவக்கத்தில் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் ஏளனமாக கூறினார்.
இதையும் படிங்க: ரசித் கானிடம் அவுட்டானதால் கோபப்பட்ட தோனியால்.. கோச்சிங் கேரியர் முடிஞ்சுன்னு நினைச்சேன்.. ஹசி பேட்டி
கடைசியில் அத்தொடரிலேயே இந்தியாவிடம் 3 – 0 (3) என்ற ஒயிட் பாஸ் அவமானத் தோல்வியை இங்கிலாந்து சந்தித்தது. அந்த நிலையில் தற்போது சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடிய 3 போட்டியிலும் தோற்ற இங்கிலாந்து 3 – 0 என்ற மற்றொரு ஒய்ட்வாஷ் அவமானத்தை சந்தித்துள்ளது. மேலும் சாம்பியன்ஸ் ட்ராபியில் ஒரு வெற்றியைக் கூட பெறாத அணி என்ற ஜிம்பாப்வே (2006), வெஸ்ட் இண்டீஸ் (2009), பாகிஸ்தான் (2013) அணிகளின் மோசமான உலக சாதனையையும் இங்கிலாந்து சமன் செய்துள்ளது.