- Advertisement -
உலக கிரிக்கெட்

7க்கு 7.. இந்தியாவுக்கு பின் உலக சாதனை போராட்டம் செய்த பாகிஸ்தானை சாய்த்த தெ.ஆ.. ஆஸிக்கு சவால்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் பாகிஸ்தான் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் வென்ற தென்னாப்பிரிக்கா 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற்றது. அடுத்ததாக இரண்டாவது போட்டி ஜனவரி மூன்றாம் தேதி கேப் டவுன் நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது.

அடுத்ததாக களமிறங்கிய அந்த அணி அபாரமாக விளையாடி 615 ரன்கள் குவித்து மிரட்டியது. தென்னாபிரிக்காவுக்கு அதிகபட்சமாக ரியான் ரிக்கல்ட்டன் இரட்டை சதத்தை விளாசி 259 ரன்கள் குவித்தார். அவருடன் கேப்டன் தெம்பா பவுமா 106, கெய்ல் வேரின் 100 ரன்கள் குவித்து அசத்தினார்கள்.

- Advertisement -

பாகிஸ்தான் போராட்டம்:

பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக சல்மான் ஆகா மற்றும் முகமது அப்பாஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். பின்னர் களமிறங்கிய பாகிஸ்தானை மிரட்டலாக பந்து வீசிய தென்னாப்பிரிக்கா வெறும் 194க்கு ஆல் அவுட் செய்தது. அதிகபட்சமாக பாபர் அசாம் 58, முகமது ரிஸ்வான் 46 ரன்கள் எடுத்த நிலையில் தென்னாபிரிக்காவுக்கு அதிகபட்சமாக ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 421 ரன்கள் முன்னிலை பெற்ற தென்னாப்பிரிக்கா மீண்டும் பேட்டிங் செய்யுமாறு பாகிஸ்தானுக்கு ஃபாலோ ஆன் கொடுத்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு 205 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த பாபர் அசாம் 81, கேப்டன் ஷான் மசூத் சதத்தை அடித்து 145 குவித்து போராடினார்கள். ஆனால் அவர்களை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிய ரன்கள் குவிக்கவில்லை.

- Advertisement -

7க்கு 7 வெற்றி:

அதனால் முடிந்தளவுக்கு போராடிய பாகிஸ்தானை 478 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய தென்னாபிரிக்காவுக்கு அதிகபட்சமாக கேசவ் மகாராஜ், ரபாடா தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். இறுதியில் வெறும் 58 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு பேடிங்கம் 47* (30), ஐடன் மார்க்ரம் 14* (13) ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் 2 – 0 (2) என்ற கணக்கில் பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து இத்தொடரை தென்னாப்பிரிக்கா வென்றது.

இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பிடிக்க வாய்ப்பில்லை – காரணம் இதுதான்

அத்துடன் கடைசியாக விளையாடிய 7 போட்டிகளில் 7 வெற்றிகளை பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா அடுத்ததாக 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் உங்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்பதை ஆஸ்திரேலியாவுக்கு சவாலாக காண்பித்துள்ளது. மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஃபாலோ ஆன் பெற்று போராடி தோல்வியை சந்தித்த போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணிகளின் உலக சாதனை பட்டியலில் பாகிஸ்தான் 2வது இடத்தைப் பிடித்தது. அந்த பட்டியல்:
1. இந்தியா: 510, இங்கிலாந்துக்கு எதிராக, ஹெண்டிங்லே, 1967
2. பாகிஸ்தான்: 478, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, கேப் டவுன், 2025*
3. இலங்கை: 475, இங்கிலாந்துக்கு எதிராக, செஸ்டர்-லே-ஸ்ட்ரீட், 2016

- Advertisement -