சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பிடிக்க வாய்ப்பில்லை – காரணம் இதுதான்

Samson
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் இந்திய அணிக்காக கடந்த 2015-ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 37 போட்டிகளில் விளையாடி மூன்று சதம் மற்றும் இரண்டு அரைசதம் என 810 ரன்களை குவித்துள்ளார். மேலும் கடந்த 2021-ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான அவர் 16 போட்டியில் விளையாடி ஒரு சதம் மற்றும் மூன்று அரைசதம் என 510 ரன்கள் குவித்துள்ளார்.

சஞ்சு சாம்சன் இடம்பிடிக்க வாய்ப்பே இல்லை :

மிகச் சிறப்பான திறமை உடைய வீரராக சஞ்சு சாம்சன் பார்க்கப்பட்டாலும் அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியில் நிறைய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் ஐபிஎல் தொடரில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் அவர் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கேப்டனாக விளையாடி வருகிறார்.

- Advertisement -

அந்தவகையில் 168 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மூன்று சதம் மற்றும் 25 அரைசதம் என 4419 ரன்களை அடித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் தற்போதைய இந்திய டி20 அணியின் துவக்க வீரராகவும் விக்கெட் கீப்பராகவும் இருந்து வருகிறார்.

ஆனால் அவருக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இந்நிலையில் எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் இந்திய அணியில் ஏற்கனவே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் இருக்கின்றனர். அவர்களை தாண்டி சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம். அதேபோன்று சஞ்சு சாம்சன் டி20 போட்டிகளில் அதிரடியான துவக்க வீரர் என்று தற்போது உறுதி செய்யப்பட்டு அந்த ரோலிலேயே விளையாடி வருவதால் அவரை ஒருநாள் போட்டியில் சேர்க்க வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.

இதையும் படிங்க : பாவங்க கரும்பு சக்கை மாதிரி பும்ராவை உடைச்சுட்டிங்களே.. அதுக்கு கம்பீர் செலக்சனே காரணம்.. ஹர்பஜன் விளாசல்

அதுமட்டுமின்றி இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே தொடரிலும் அவர் கேரளா அணியில் இருந்து வெளியேறி உள்ளதால் நிச்சயம் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்று தெரிகிறது.

Advertisement