- Advertisement -
உலக கிரிக்கெட்

11இல் 2 தோல்வி.. மழையைத் தாண்டி இங்கிலாந்தை அதன் கோட்டையான கார்டிஃபில் சாய்த்த தெ.ஆ

இங்கிலாந்தில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 – 1 என்ற கணக்கில் 1998க்குப்பின் தென்னாப்பிரிக்கா வென்று அசத்தியது. அடுத்ததாக அவ்விரு அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் செப்டம்பர் 10ஆம் தேதி ஃகார்டிப் நகரில் நடைபெற்றது. அங்குள்ள சோபியா கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 11 மணிக்குத் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு ரியன் ரிக்கல்டனை கோல்டன் டக் அவுட்டாக்கிய லுக் வுட் அடுத்து வந்த டிரே பிரிட்டோரியஸை 2 ரன்னில் காலி செய்தார். அடுத்த ஓவரிலேயே மறுபுறம் அதிரடி காட்டிய கேப்டன் ஐடன் மார்க்ரம் 28 (14) ரன்களில் அவுட்டானார். மிடில் ஆர்டரில் தேவால்ட் ப்ரேவிஸ் அதிரடியாக விளையாட முயற்சித்து 23 (10) ரன்னில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

மழையைத் தாண்டி:

அதே போல ஸ்டப்ஸ் 13 (6) ரன்னில் அவுட்டான நிலையில் டோனவன் பெரிரா அதிரடியாக விளையாடி 25* (11) ரன்கள் எடுத்தார். அப்போது மழை வந்ததால் முதல் இன்னிங்ஸ் முடிவதாக நடுவர்கள் அறிவித்தனர். 7.5 ஓவரில் தென்னாப்பிரிக்கா 97/5 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு லுக் வுட் 2, அடில் ரசித் 1, ஜெமி ஓவர்டன் 1, சாம் கரண் 1 விக்கெட்டுகள் எடுத்தார்கள்.

பின்னர் மழை ஓய்ந்தப் பின் இங்கிலாந்து வெற்றி பெற டிஎல்எஸ் விதிமுறைப்படி 5 ஓவரில் 69 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கு உருவாக்கப்பட்டது. அதைத் துரத்திய இங்கிலாந்துக்கு பில் சால்ட் 0, ஜேக்கப் பெத்தல் 7, கேப்டன் ஹாரி ப்ரூக் 0, டாம் பான்டன் 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதே போல நம்பிக்கை நட்சத்திரம் ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாட முயற்சித்து 25 (11) ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

கோட்டையில் வெற்றி:

கடைசியில் வில் ஜேக்ஸ் 1* (2), சாம் கரண் 10* (3) ரன்கள் எடுத்தும் 5 ஓவரில் 54/5 ரன்களை மட்டுமே எடுத்த இங்கிலாந்து தோல்வியைச் சந்தித்தது. மறுபுறம் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக மார்க்கோ யான்சன், கோர்பின் போஸ்க் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இந்த வெற்றியால் 1 – 0* (3) என்ற கணக்கில் டி20 தொடரிலும் தென்னாப்பிரிக்கா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: ஒட்டு மொத்தமாக 4 ஆவது இந்திய வீரராகவும்.. சேஸிங்கில் முதல் இந்திய வீரராகவும் அபிஷேக் சர்மா – நிகழ்த்திய சாதனை

அத்துடன் இப்போட்டி நடைபெற்ற ஃகார்டிப் மைதானத்தில் வரலாற்றில் 11 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அந்த 11 போட்டிகளில் 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து 2 போட்டிகளில் மட்டும் தோற்றுள்ளது. ஆச்சரியப்படும் வகையில் அந்த 2 போட்டிகளிலும் தென்னாபிரிக்காவிடம் (2022, 2025*) இங்கிலாந்து தோற்றுள்ளது. இதிலிருந்து இங்கிலாந்தை அதனுடைய கோட்டையான ஃகார்டிப் மைதானத்தில் மீண்டும் தென்னாப்பிரிக்கா சாய்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -