193க்கு ஆல் அவுட்.. தொடர்ந்து 10வது வருடமாக ஆஸியை சாய்த்த தெ.ஆ.. 5வது தொடர் சாதனை வெற்றி

Aus vs rsa
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற தென்னாப்பிரிக்கா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற நிலையில் 2வது போட்டி ஆகஸ்ட் 22ஆம் தேதி மெக்காய் நகரில் நடைபெற்றது. இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 277 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மேத்தியூ பிரீட்ஸ்கே 88, ட்ரிஸ்தன் ஸ்டப்ஸ் 74 ரன்கள் எடுத்தார்கள். ஆஸ்திரேலிய அணிக்கு அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

தென்னாப்பிரிக்கா அசத்தல்:

அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு ட்ராவிஸ் ஹெட் 6, கேப்டன் மிட்சேல் மார்ஷ் 18, லபுஸ்ஷேன் 1 ரன்னில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அப்போது ஜோடி சேர்ந்த ஜோஸ் இங்லீஷ் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் ஆஸ்திரேலியாவை மீட்டெடுக்க போராடினர். அதில் அதிரடியாக விளையாடிய இங்லீசுடன் சேர்ந்து 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த க்ரீன் 35 ரன்களில் அவுட்டாகி சென்றார்.

மறுபுறம் அசத்திய இங்லீஷ் அரை சதத்தை அடித்து அசத்தினார். ஆனால் எதிர்ப்புறம் வந்த அலெக்ஸ் கேரி 13, ஆரோன் ஹார்டி 10, சேவியர் பார்லெட் 8 ரன்னில் அவுட்டாகி கை கொடுக்கத் தவறினர். கடைசியில் இங்கிலீஷ் போராடி 87 ரன்னில் அவுட்டானார். அதனால் 37.4 ஓவரிலேயே ஆஸ்திரேலியாவை 193 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய தென்னாபிரிக்கா 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

10வது வருடமாக 5வது வெற்றி:

தென்னாபிரிக்காவுக்கு அதிகபட்சமாக லுங்கி நிகிடி 5, நன்ரே 2, சேனுரான் முத்துசாமி 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள். அதனால் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் 2 – 0* (3) என்ற கணக்கில் கடைசிப் போட்டிக்கு முன்பாகவே தென்னாபிரிக்கா வென்றுள்ளது. இதையும் சேர்த்து கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய 5 ஒருநாள் தொடர்களையும் வென்று தென்னாப்பிரிக்கா சாதனை படைத்துளது.

இதையும் படிங்க: ஆசிய கோப்பையில் அவங்க 2 பேரை சேக்காம கம்பீர் பெரிய தப்பு பண்ணிட்டாரு – மனோஜ் திவாரி கருத்து

2016, 2018, 2020, 2022, 2025* ஆகிய வருடங்களில் நடைபெற்ற தொடர்களில் முறையே 5 – 0 (5), 2 – 1 (3), 3 – 0 (3), 3 – 2 (5), 2 – 0* (3) என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை தென்னாபிரிக்கா வென்றுள்ளது. அந்த வகையில் உலக சாம்பியனாக திகழும் ஆஸ்திரேலியாவை கடந்த 10 வருடங்களாக ஒருநாள் தொடர்களில் தென்னாப்பிரிக்கா திணறடித்து வருகிறது. மறுபுறம் 6 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக 3 ஒருநாள் தொடர்களில் (பாகிஸ்தான், இலங்கை, தென்னாப்பிரிக்கா) தோற்றுள்ளது.

Advertisement